இந்திய விவசாயத் துறை சீர்திருத்தம் முதலீடுகளை ஈர்க்கும்: அமெரிக்கா அறிக்கை

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன்: 2021-ல் இந்தியாவில் நிலவும் முதலீட்டு சூழல் குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் புதிய தொழிலாளர் விதிகள் மற்றும் முக்கிய விவசாயத் துறை சீர்திருத்தங்கள் தனியார் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்க உதவும் என தெரிவித்துள்ளது.அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அதன் தூதரகங்களில் உள்ள பொருளாதார அதிகாரிகள் மூலம்

வாஷிங்டன்: 2021-ல் இந்தியாவில் நிலவும் முதலீட்டு சூழல் குறித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் புதிய தொழிலாளர் விதிகள் மற்றும் முக்கிய விவசாயத் துறை சீர்திருத்தங்கள் தனியார் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்க உதவும் என தெரிவித்துள்ளது.latest tamil news
அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அதன் தூதரகங்களில் உள்ள பொருளாதார அதிகாரிகள் மூலம் 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் தொழில் சூழல் பற்றிய அறிக்கைகளை ஆண்டுதோறும் அளிக்கும். அமெரிக்க நிறுவனங்களுக்கு தொழில் வாய்ப்பு உள்ள நாடுகளை கண்டறிய இப்பணியினை செய்கிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான இந்தியா பற்றிய அறிக்கையில், மத்திய அரசின் பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புகள் காரணமாக 8% ஜி.டி.பி., வீழ்ச்சியிலிருந்து ஜனவரி 2021-ல் நேர்மறை வளர்ச்சிக்கு நாடு திரும்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சுருக்கமாக தனது அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: இந்திய அரசு தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகளை பெற தீவிரம் காட்டுகிறது. கோவிட் சூழலைத் தொடர்ந்து, இந்தியா பொருளாதார கட்டமைப்பில் சீர்திருத்தங்களை செய்துள்ளது.

புதிய தொழிலாளர் விதிகள் மற்றும் முக்கியமான விவசாயத் துறை சீர்திருத்தங்கள் அதிலடங்கும். அவை தனியார் மற்றும் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்க உதவும். தனியார்மயமாக்கல் மூலம் 2,400 கோடி டாலர் திரட்டும் திட்டத்தை பிப்ரவரி 2021-ல் நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் பங்கை பெருமளவு குறைக்கும்.


விரிவான சமூக நலத் திட்டங்கள்மார்ச் மாதம் பாராளுமன்றம், இந்தியாவின் காப்பீட்டுத் துறையை மேலும் தாராளமயமாக்கியது. அன்னிய நேரடி முதலீட்டு வரம்புகளை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியது. இருப்பினும் இயக்குனர் குழுவினர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சரிகட்ட இந்திய அரசு விரிவான சமூக நலன் மற்றும் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை இயற்றியது. உள்கட்டமைப்பு மற்றும் பொது சுகாதாரத்திற்கு அதிகம் செலவிட்டது.


தடைகளை குறைக்க வேண்டும்


மருந்துத் துறை, ஆட்டோமொபைல், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற துறைகளில் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக சலுகைகளை வழங்கியது...


latest tamil news
நேர்மறையான வளர்ச்சிக்கு திரும்பிய ஜி.டி.பிஇந்த நடவடிக்கைகளால் போன நிதியாண்டில் சுமார் 8% வீழ்ச்சியடைந்திருந்த ஜி.டி.பி., ஜனவரி 2021-க்குள் நேர்மறையான வளர்ச்சிக்கு திரும்பியது. இருப்பினும், இந்தியா வர்த்தகம் செய்ய ஒரு சவாலான இடமாக உள்ளது. அதிக கட்டணங்கள், போட்டி விருப்பங்களை கட்டுப்படுத்தும் கொள்முதல் விதிகள், சர்வதேச தரங்களுடன் பொருந்தாத இந்திய தரநிலைகள் போன்றவை உள்ளன. தடைகளை குறைத்து விருப்பமான, நம்பகமான முதலீட்டு சூழலை வளர்க்குமாறு இந்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் சர்வதேச தரங்களுடன் பொருந்தாத இந்திய தரநிலைகள் உள்ளன.
Rate this:
Cancel
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் எங்கேயோ வெளி நாடுகளில் வாழ்பவர்களுக்கு தெரிகிறது நம் வளர்ச்சி இங்குள்ள ஆட்களுக்கு தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X