பத்திரிகை அலுவலகங்களில் வரித் துறை சோதனை

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : 'தைனிக் பாஸ்கர்' மற்றும் 'பாரத் சமாச்சார் டிவி' ஊடக அலுவலகங்கள், உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 12 மாநிலங்கள்மத்திய பிரதேசத்தை சேர்ந்த 'தைனிக் பாஸ்கர்' நாளிதழ் 12 மாநிலங்களில் 65 பதிப்புகள், 211 துணை பதிப்புகளை உடையது. ஹிந்தி, குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் நாளிதழ்களை
பத்திரிகை அலுவலகம், வரித் துறை, சோதனை

புதுடில்லி : 'தைனிக் பாஸ்கர்' மற்றும் 'பாரத் சமாச்சார் டிவி' ஊடக அலுவலகங்கள், உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.


12 மாநிலங்கள்


மத்திய பிரதேசத்தை சேர்ந்த 'தைனிக் பாஸ்கர்' நாளிதழ் 12 மாநிலங்களில் 65 பதிப்புகள், 211 துணை பதிப்புகளை உடையது. ஹிந்தி, குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகளில் நாளிதழ்களை வெளியிடுகிறது.இவை தவிர ஏழு மாநிலங்களில் 30 வானொலி நிலையங்கள், ஆறு செய்தி இணையதளங்கள், நான்கு 'மொபைல் போன்' செயலிகளும் இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்றன. டில்லி, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள 'தைனிக் பாஸ்கர்' நாளிதழ் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். ம.பி., தலைநகர் போபாலில் உள்ள நாளிதழ் உரிமையாளர்கள் வீடுகளிலும் சோதனை நடந்தது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியான 'பாரத் சமாச்சார் டிவி' அலுவலகம், தலைமை ஆசிரியர் பிரஜேஷ் மிஷ்ரா, நிர்வாகி வீரேந்திர சிங் மற்றும் சில ஊழியர்களின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். மேலும், உ.பி.,யை சேர்ந்த பா.ஜ., - எம்.எல்.ஏ., அஜய் சிங் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித் துறை சோதனை நேற்று நடந்தது.

இதற்கும், ஊடக நிறுவனத்தில் நடந்த சோதனைக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.இந்த சோதனைகள் குறித்து 'தைனிக் பாஸ்கர்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா இரண்டாவது அலையின் போது மத்திய அரசு திறமையாக செயல்பட தவறியதை, செய்திகள் வாயிலாகமக்களிடம் எடுத்துச் சென்றோம்.
நடவடிக்கை


இதன் காரணமாகவே எங்கள் அலுவலகம், ஊழியர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. எதற்காக இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்து, மூத்த வருமான வரித் துறை அதிகாரிகள் இதுவரை தெளிவுபடுத்தவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த சோதனைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆம் ஆத்மி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.'பா.ஜ., அரசுக்கு எதிராக கருத்து கூறுபவர்களை இது போன்ற நடவடிக்கை வாயிலாக ஒடுக்குவது ஆபத்தான போக்கு. இதற்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்' என, அவர்கள் தெரிவித்தனர்.


தலையீடு இல்லை!


மத்திய விசாரணை அமைப்புகளின் பணிகளில் நாங்கள் தலையிடுவது இல்லை. அவர்களது வேலையை யாருடைய தலையீடும் இன்றி செய்கின்றனர். எந்தவொரு சம்பவம் குறித்தும் செய்தி வெளியிடுவதற்கு முன், உண்மையை உறுதி செய்ய வேண்டும். அனுராக் சிங் தாக்குர் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
23-ஜூலை-202112:56:28 IST Report Abuse
Sridhar இந்த DB குரூப் பத்திரிக்கை மட்டும் நடத்தவில்லை. மின்சாரம் தயாரிப்பிலிருந்து ஏகப்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர். பத்திரிக்கை நடத்துவதால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? ஆனால், வழக்கம்போல ஒருநாள் கூத்தாக இல்லாமல், முழுவிவரமும் வெளிவந்து என்ன தவறு செய்தார்கள், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது போன்ற விவரங்கள் வெளியிடப்படவேண்டும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
23-ஜூலை-202109:02:55 IST Report Abuse
duruvasar குரல் கொடுத்தவர்கள் லிஸ்டை பார்த்தாலே உண்மை விளங்கும்.
Rate this:
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
23-ஜூலை-202108:53:56 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் நாலாவது தூண் நாசமாகி போய் ரொம்ப நாளாச்சு.. திமுக பாரதி சொன்ன கருத்துக்கே கோபப்படாத நம்மூர் ஊடகங்கள் இருக்கும்போது ஊடக லக்ஷ்ணம் தெரியாதா . எதோ தினமலர் மாதிரி சாயாத ஊடகமும் இருக்கு.
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
23-ஜூலை-202112:37:35 IST Report Abuse
Dhurveshஇத விட நீதி துறை ஒரு தலைமை நீதிபதியின் sec போன் ஒட்டு கேட்டு என்ன மாதிரி rafel ramaR கோயில் எல்லா தீர்ப்புகளும் அரசுக்கு FAVOUR ஆஹ் வந்தது அவருக்கு பரிசு RS பதவி z பிளஸ் செக்யூரிட்டி , அவரை கண்டிப்பா கடவுள் தண்டிப்பார் பாருங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X