'ஏழைகள், பணக்காரர்களுக்கு தனித்தனி நீதி இருக்க முடியாது'

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி : 'இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் எனத் தனித்தனியாக நீதி பரிபாலன முறை இருக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராம்பாய் சிங். இவரின் கணவர் கோவிந்த் சிங். மேல்முறையீடுஇரண்டு ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பிரமுகர் தேவேந்திர சவுரேஸ்யா கொல்லப்பட்ட வழக்கில்
ஏழைகள், பணக்காரர்கள், தனித்தனி, நீதி, முடியாது

புதுடில்லி : 'இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் எனத் தனித்தனியாக நீதி பரிபாலன முறை இருக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராம்பாய் சிங். இவரின் கணவர் கோவிந்த் சிங்.


மேல்முறையீடு



இரண்டு ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பிரமுகர் தேவேந்திர சவுரேஸ்யா கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கோவிந்த் சிங், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவருக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் 'ஜாமின்' வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ம.பி., அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.கோவிந்த் சிங்கின் ஜாமினை நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்து நேற்று உத்தரவிட்டதாவது: நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருப்பது சுதந்திரமான, பாரபட்சமில்லாத நீதித்துறை தான்.

அரசியல் அழுத்தங்கள், தாக்கங்களில் இருந்து நீதித்துறை தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.இந்தியாவில் இருவிதமான நீதி பரிபாலனமுறை இருக்க முடியாது. பணக்காரர்களுக்கான, அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கான நீதி பரிபாலன முறையும், ஏழ்மையான, எந்தவிதமான பண வசதியும் இல்லாதவர்களுக்கு தனியாக நீதி பரிபாலன முறையும் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.


நம்பிக்கை



மாவட்ட நீதிமன்றம் தான் மக்களின் முதல் நம்பிக்கை. நீதித்துறையில் மக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், மாவட்ட நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். நியாயத்துக்காக நீதிபதிகள் குரல் கொடுத்து எழுந்து நிற்கும்போது, அவர்கள் இலக்காக்கப்படுகிறார்கள். நீதித்துறையின் புனிதத் தன்மையைப் பாதுகாக்க மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தவறிவிட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh kumar - Salmiyah,குவைத்
24-ஜூலை-202112:34:36 IST Report Abuse
suresh kumar ஏழைகள் கோர்ட்டுக்கு போகவே முடியாது. எந்த ஒரு வழக்கிற்கும், எத்தனை வாயிதாக்கள் அத்தனை முறையும் கோர்ட்டுக்கு போனால் வருமானத்திற்கு என்ன வழி? குடும்பத்தை எப்படி சமாளிப்பது?
Rate this:
Cancel
23-ஜூலை-202119:04:29 IST Report Abuse
அப்புசாமி ஏழைகள், பணக்காரர்கள் எல்லோருக்கும் ஒரே ந்திதாஞுவர் ஆனர். ஆனா, தீர்ப்பு மட்டும் தான் வேற வேறயா இருக்கும் யுவர் ஆனர்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
23-ஜூலை-202114:16:06 IST Report Abuse
J.Isaac நடைமுறையில் ஆளுகிறவர்களுக்கு, ,அரசியல்வாதிகளுக்கு,பணக்காரர்களுக்கு ஒரு நீதி,ஏழை பாமர மக்களுக்கு நீதி உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X