போன் ஒட்டு கேட்பு விவகாரம் : மூன்றாவது நாளாக முடங்கியது பார்லிமென்ட்

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (11+ 11)
Share
Advertisement
எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அமளி காரணமாக மொபைல் போன் ஒட்டுகேட்பு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளும், எந்த அலுவல்களும் நடக்காமல் இரண்டு சபைகளும் முடக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் இந்த அமளியால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் 19ல் துவங்கியது. முதல் இரண்டு
 மூன்றாவது நாள், பார்லிமென்ட் முடங்கியது

எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் அமளி காரணமாக மொபைல் போன் ஒட்டுகேட்பு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் மழைக்கால கூட்டத்தொடரின் மூன்றாவது நாளும், எந்த அலுவல்களும் நடக்காமல் இரண்டு சபைகளும் முடக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் இந்த அமளியால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் 19ல் துவங்கியது. முதல் இரண்டு நாட்கள் பெரும் அமளியை சந்தித்து இரண்டு சபைகளிலும் அலுவல்கள் நடக்க முடியாது நிலை ஏற்பட்டது. புதிய அமைச்சர்களை பிரதமரால் அறிமுகம் செய்து வைக்க முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகை விடுமுறை முடிந்து நேற்று பார்லிமென்ட் மீண்டும் கூடியது.


மீண்டும் கூடியதுஏற்கனவே, 'பெகாசஸ்' மொபைல் போன் ஒட்டுகேட்பு, பெட்ரோல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்காக முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர்.காலையில் லோக்சபா கூடியதும் கேள்வி நேரத்தை துவங்க சபாநாயகர் ஓம்பிர்லா முயற்சித்தார். அப்போது எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் கடும் கோபாவேசம் காட்டினர். தாங்கள் அளித்த நோட்டீஸ்களுக்கு அனுமதி தர வலியுறுத்தி கோஷமிட்டனர்.
'முக்கிய விவகாரங்களுக்கு தீர்வு காண்பதை விட உளவு பார்ப்பதில்தான் அரசு தீவிரம் காட்டவேண்டுமா. உளவு பார்ப்பதற்காகவே மத்தியில் ஓர் அரசு உள்ளதா' என்ற கேள்விகளும், கோஷங்களும் சபையை அதிர வைத்தன.

அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா, ''மக்கள் பிரச்னைகளை விவாதிப்பதற்காகவே தேர்தெடுக்கப்பட்டு சபைக்கு வந்துள்ளோம். கோஷங்கள் போடுவதற்காக அல்ல. எனவே சபை சுமுகமாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.ஆனாலும் அமளி அதிகமாகவே சபை 12:00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியது. அப்போதும் அமளி தொடர்ந்தது. பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசுகையில், ''கொரோனா குறித்த ராஜ்யசபாவில் விவாதம் நடந்து முடிந்துள்ளது. இங்கும் அந்த விவாதம் நடக்க வேண்டும். ''எந்த பிரச்னையாக இருந்தாலும் விவாதம் நடத்த அரசு தயார். கேள்வி நேரம் எம்.பி.,க்களின் உரிமை; அதை யாரும் தடுக்க கூடாது,'' என்றார்.பெரும் அமளிக்கு மத்தியில் இரு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அடுத்தடுத்து எந்த ஓர் அலுவல்களையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு குழப்பம் நீடிக்கவே வேறுவழியின்றி நாள் முழுதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
விடமாட்டோம்ராஜ்யசபாவில் சபைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்களும் நின்றதால் பெரும் பரபரப்பு நிலவியது. 'பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பொய் சொல்கிறது. தப்பிக்க பார்க்கிறது. விடமாட்டோம்' என, ஆவேசமாக கோஷமிட்டனர். காலையில் இரண்டு ஒத்திவைப்புகளை சந்தித்த ராஜ்யசபா, மதியம் 2:00 மணிக்கு கூடியபோதும் அமளி தொடர்ந்தது. பெகாசஸ் விவகாரம் குறித்து அரசு தரப்பிலிருந்து தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் அறிக்கை தாக்கல் செய்ய எழுந்தார்.''பெகாசஸ் விவகாரத்தில மத்திய அரசை களங்கப்படுத்தும் முயற்சி நடக்கிறது,'' என அவர் கூறியபோது, எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் அதை ஏற்காமல் கடும் எதிர்ப்பை தெரிவித்து கோஷமிட்டனர்.


யாருக்கும் கேட்கவில்லைஅமைச்சரால் தொடர்ந்து பேசவோ, அறிக்கை தாக்கல் செய்யவோ முடியாத அளவுக்கு நிலைமைகள் சென்றன. திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள், அறிக்கையை கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் எழுந்த பெரும் அமளி கராணமாக அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் பேசுவதும், சபைத் தலைவர் பேசுவதும் யாருக்கும் கேட்கவில்லை.

இதையடுத்து சில நிமிடங்களிலேயே ராஜ்யசபாவும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் பார்லிமென்ட் தொடர்ந்து மூன்றாவது நாளாக முடங்கியது. பார்லிமென்ட் கூட்டம் நடப்பதற்கு, மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் செலவிடப்படுகிறது. எதிர்க்கட்சிகள் இதைப் பற்றி கவலைப்படாமல் பார்லிமென்ட் கூட்டத் தொடரை முடக்குவது, பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


எம்.பி.,க்கள் மீது நடவடிக்கை?'மொபைல் போன்' உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபாவில் நேற்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளிக்க துவங்கினார்.அப்போது அமைச்சர் வைஷ்ணவ் கையில் இருந்த அறிக்கையை பறித்த திரிணமுல் காங்., - எம்.பி., ஷாந்தனு சென், அதை சுக்கு நுாறாக கிழித்தார். இவருடன் மேலும் சில திரிணமுல்
எம்.பி.,க்களும் அமளியில் ஈடுபட்டனர். ராஜ்யசபாவின் மாண்பை சீர்குலைக்கும் விதமாக நடந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க கோரி ராஜ்யசபா தலைவரிடம் முறையிட, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


விசாரணை கோரி வழக்குமொபைல் போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக டில்லியைச் சேர்ந்த எம்.எல். சர்மா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மொபைல் போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படுவது தனிமனித சுதந்திர பிரச்னை மட்டுமல்ல அது தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல். உளவு பார்க்கும் மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே அளிப்பதாக இஸ்ரேல் நிறுவனம் கூறியுள்ளது. அவ்வாறு நம் அரசோ அல்லது அமைப்புகளோ வாங்கியிருந்தால், அது சட்டவிரோதமானது என உத்தரவிட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் வேறு நாடுகளால் அல்லது வெளிநாட்டு அமைப்புகளால் உளவு பார்க்கப்பட்டிருந்தால், அது நம் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


'ஆம்னஸ்டி' விளக்கம்'பார்பிடன் ஸ்டோரிஸ்' என்ற சர்வதேச ஊடக அமைப்பும், 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' என்ற மனித உரிமைக்கான சர்வதேச தொண்டு அமைப்பும் இணைந்து மொபைல் போன் ஒட்டு கேட்பு விவகாரத்தை வெளிப்படுத்தியுள்ளன.இந்நிலையில் இந்த தகவல்களை ஆம்னஸ்டி அமைப்பு மறுத்துள்ளதாக, சமூக வலை தளங்களில் பதிவிடப்பட்டது.இது குறித்து அந்த அமைப்பு கூறியுள்ளதாவது:தகவல்களை நாங்கள் மறுத்துள்ளதாக வந்துள்ள செய்திகளில் உண்மையில்லை. ஒட்டு கேட்பு விவகாரத்தில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மையானவை; உறுதி செய்யப்பட்டவை.
இவ்வாறு அது கூறியுள்ளது.


காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம்விவசாய சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.,க்கள் பார்லிமென்ட் நுழைவாயிலில் உள்ள காந்திசிலை முன்பாக, ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராகுல் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 'விவசாயிகளுக்கு நீதி வழங்கு. விவசாய சட்டங்களை உடனே ரத்து செய்' என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதே பிரச்னைக்காக தி.மு.க., இடதுசாரிகள், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எம்.பி.,க்களும் காந்தி சிலை முன் தங்கள் பங்கிற்கு தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (11+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஜூலை-202121:03:22 IST Report Abuse
Kasimani Baskaran குறளை அரைத்துக்குடித்த திராவிடமத ஆதரவாளர்கள் "ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்" என்ற 581 வது குறளை மனதில் கொள்வது நல்லது. இதன் பொருள்: நடப்புகளை அறிந்து நூல்களில் தெளிவுபெற்று இருப்பதற்கே கண் உள்ளது. கண்காணிப்பதற்கும் இதுவே அவசியம். செயல்களில் மாற்றம் இல்லாதபடியும், அதே சமயத்தில் செயல்கள் தந்த மாற்றத்தை காண்காணிப்பதும் ஆட்சியாளர்களின் பணி. காண்காணிப்பை பலர் மூலம் உறுதி செய்வது நல்லது"
Rate this:
Cancel
Martin - Chennai,இந்தியா
23-ஜூலை-202117:31:35 IST Report Abuse
Martin அரசு உளவு பார்க்கவில்லை என்றால், இல்லை என்று ஆணித்தனமாக ஒரு அறிக்கை விட வேண்டியது தானே. எல்லா குழப்பமும் முடிந்துவிடும். அமைதி காப்பது ஏன் ? மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா? ஆம் என்றால் ஜனநாயக கொலை தான் இது.
Rate this:
Cancel
M.P.Pillai - CHENNAI,இந்தியா
23-ஜூலை-202113:38:48 IST Report Abuse
M.P.Pillai இவங்க பிரச்சனையே பேசத்தான் பார்லிமென்ட் செல்கிறார்கள். மக்கள் பிரச்சனை பத்தி கவலையே கிடையாது. தப்பா இருந்தால் கேஸ் போடவேண்டியதுதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X