பிரதமர் மோடியை அடுத்த வாரம் சந்திக்கிறார் மம்தா| Dinamalar

பிரதமர் மோடியை அடுத்த வாரம் சந்திக்கிறார் மம்தா

Updated : ஜூலை 22, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (7)
Share
கோல்கட்டா: “பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்தித்து பேசுகிறேன்,” என, மேற்கு வங்காள முதல்வர், மம்தா பானர்ஜி கூறினார்.திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:அடுத்த வாரம் டில்லி செல்கிறேன். ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்தால் சந்திப்பேன். தன்னை சந்திக்க பிரதமர் எனக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். பத்திரிகை
 மோடி , அடுத்த வாரம் சந்திப்பு,   மம்தா

கோல்கட்டா: “பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்தித்து பேசுகிறேன்,” என, மேற்கு வங்காள முதல்வர், மம்தா பானர்ஜி கூறினார்.

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:அடுத்த வாரம் டில்லி செல்கிறேன். ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்தால் சந்திப்பேன்.


latest tamil news



தன்னை சந்திக்க பிரதமர் எனக்கு நேரம் ஒதுக்கியுள்ளார். பத்திரிகை அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்துவது ஆபத்தான போக்கு; கண்டனத்துக்குரியது.


பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் மிக மோசமானது. இந்த அரசு தன் அமைச்சர்களையே நம்பவில்லை. நாட்டில், 'சூப்பர் எமர்ஜென்சி' நிலவுவதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X