பொது செய்தி

இந்தியா

கொரோனா பலியை குறைத்து காட்டவில்லை: மத்திய அரசு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆய்வறிக்கை இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா பலியின் அடிப்படையில் நம் நாட்டில்

புதுடில்லி:கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைத்து காட்டப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைத்து காட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.


ஆய்வறிக்கை



இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: மற்ற நாடுகளில் பதிவாகியுள்ள கொரோனா பலியின் அடிப்படையில் நம் நாட்டில் பதிவான பலிகளை ஒப்பிட்டு சில ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. இது முறையான கணிப்பு இல்லை.

நம் நாட்டில் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா காலத்தில் அதிக பலி ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளனர். அவை அனைத்துமே கொரோனாவால் ஏற்பட்டதாக எப்படி கருத முடியும்.இறப்பு தகவல்கள் பதிவிடுவது தொடர்பாக நம் நாட்டில் மிகவும் சிறப்பான நடைமுறை உள்ளது. கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கிராமங்கள் நகரங்கள் மாவட்டங்கள் என மாநில அரசுகள் தகவல்களை சேகரிக்கின்றன. அவ்வாறு மாநில அரசுகளின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.அதனால் எந்த நிலையிலும் கொரோனாவால் உயிரிழந்தோர் விபரங்களை குறைத்து காட்ட முடியாது.


இரண்டாவது அலை

வைரஸ் பரவல் முதல் அலையின்போதே கொரோனா பாதிப்பு மற்றும் பலி குறித்து பதிவிடுவது தொடர்பாக மாநிலங்களுக்கு விரிவான நடைமுறை வகுத்து தரப்பட்டுள்ளது.

ஏப். மே மாதங்களில் இரண்டாவது அலை திடீரென தீவிரமானது. அதை சமாளிக்கும் நடவடிக்கைகளில் மாநிலங்கள் மும்முரமாக இருந்தன. அந்த நேரத்தில் தகவல் பதிவிடுவதில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. மஹாராஷ்டிரா பீஹார் மத்திய பிரதேசம் என சில மாநிலங்கள் விடுபட்ட தகவல்களையும் சேர்த்துள்ளன.கடந்தாண்டு டிச. 31 நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பது 1.45 சதவீதமாக இருந்தது. கடந்த மே மாத இறுதியில் அது 1.34 சதவீதமாக இருந்துள்ளது.

துவக்கத்தில் இருந்தே இந்தியாவில் கொரோனாவில் பலி ஏற்படுவது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியதாக கூறப்படுவது தவறான கணிப்பாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X