ரூ.15 கோடி கேட்டு மிரட்டிய மாஜி கமிஷனர் மீது வழக்கு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மும்பை:வழக்கை ரத்து செய்வதற்காக 15 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் கொடுத்த புகாரில், மும்பை போலீஸ் முன்னாள் கமிஷனர் பரம்வீர் சிங் உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.மஹாராஷ்டிராவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிட மாற்றம்

மும்பை:வழக்கை ரத்து செய்வதற்காக 15 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக தொழிலதிபர் கொடுத்த புகாரில், மும்பை போலீஸ் முன்னாள் கமிஷனர் பரம்வீர் சிங் உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிராவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கில் மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.'மும்பையில் உள்ள பார்கள், உணவு விடுதிகளிடம் இருந்து மாதந்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தர சொன்னார்' என, உள்துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்., மூத்த தலைவர் அனில் தேஷ்முக் மீது, பரம்வீர் சிங் புகார் கூறிஇருந்தார்.

இதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். பரம்வீர் சிங் மீது, வன் கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர் ஒருவர், போலீசில் அளித்த புகாரில், 'என் மீதான ஒரு வழக்கை ரத்து செய்வதற்கு 15 கோடி ரூபாய் கேட்டு போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் மற்றும் ஐந்து போலீஸ் அதிகாரிகள் மிரட்டினர்' என கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து பரம்வீர் சிங் உள்ளிட்டோர் மீது எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியை இழந்த அனில் தேஷ்முக் மீதான ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து அவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி அனில் தேஷ்முக் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X