பொது செய்தி

தமிழ்நாடு

'பேக்கேஜ்' டெண்டர் விட ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
அன்னுார்:பேக்கேஜ் முறையில், டெண்டர் விட ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர் நலச்சங்க கூட்டம், அன்னுாரில் நடந்தது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை பேக்கேஜ் முறையில் ஒன்று சேர்த்து, மாவட்ட அளவில் டெண்டர் விட எதிர்ப்பு

அன்னுார்:பேக்கேஜ் முறையில், டெண்டர் விட ஒப்பந்ததாரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அன்னுார் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர் நலச்சங்க கூட்டம், அன்னுாரில் நடந்தது. எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிதியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை பேக்கேஜ் முறையில் ஒன்று சேர்த்து, மாவட்ட அளவில் டெண்டர் விட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.'அதற்கு பதில், ஒன்றிய அளவில் தனித்தனி பணிகளாக டெண்டர் விடுவதன் வாயிலாக, சிறு ஒப்பந்ததாரர்கள் பணி செய்ய முடியும். பேக்கேஜ் முறையில் பெரிய ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். எனவே, ஒன்றிய அளவில் தனி பணிகளாக டெண்டர் விட வேண்டும்' என, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. தலைவராக வெங்கடேஷ், செயலாளராக ஜெயபால், பொருளாளராக சந்திரசேகர், துணைத் தலைவராக விஜயகுமார், துணை செயலாளர்களாக தேவராஜ், சீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X