எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஏழைகள்? புதிய பஸ்கள் வாங்க ஐகோர்ட் தடை!

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (10)
Advertisement
சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் இல்லாமல், புதிய பஸ்களை வாங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசின் திட்டத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.அரசு கட்டடங்கள், பொது போக்குவரத்து வாகனங்களில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் இருக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தில் திருத்தம்
எத்தனை எம்.எல்.ஏ.,க்கள், ஏழைகள்? புதிய பஸ்கள் தடை

சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் இல்லாமல், புதிய பஸ்களை வாங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசின் திட்டத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

அரசு கட்டடங்கள், பொது போக்குவரத்து வாகனங்களில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் இருக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.அதன்படி, மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஏறி, பயணிக்கும் வகையில், வசதிகளுடன் கூடிய பஸ்களை இயக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், ''மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக, 10 சதவீத பஸ்கள் மட்டுமே வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது. தற்போது, சாலைகளின் நிலைமை மோசமாக உள்ளது; அவற்றை மேம்படுத்த வேண்டும். மேற்கொண்டு அறிக்கை பெற்று தெரிவிக்கிறேன்,'' என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, 'சட்டத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும்' என்றார். போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முதலில், 10 சதவீத பஸ்களை வாங்குகிறோம். மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான பஸ்சுக்கு, 58 லட்சம் ரூபாய் வரை செலவாகும். நிதி பிரச்னை உள்ளது. இந்தியா, ஏழை நாடு' என்றார்.

உடனே, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ''ஆட்சியாளர்கள் எத்தனை பேர், ஏழைகள்; எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஏழைகளாக உள்ளனர். சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, போக்குவரத்து கழக வழக்கறிஞர், '10 சதவீதத்தில் துவங்கி, படிப்படியாக அதிகரிக்கிறோம்' என்றார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ''நிலையை ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன். அதற்கு அவகாசம் வேண்டும். பொது மக்கள் பாதிக்கக் கூடாது,'' என்றார்.

அதைத்தொடர்ந்து, முதல் பெஞ்ச், 'மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் இல்லாமல், பொது போக்குவரத்து சேவைக்காக புதிய பஸ்கள் வாங்கக்கூடாது' என, உத்தரவிட்டது. அரசு தரப்பில், திட்ட நடவடிக்கையை தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
23-ஜூலை-202116:58:58 IST Report Abuse
Siva திமுக ஆட்சியே பிச்சை எடுத்து வந்தது என்று ஒரு பாதிரி சொன்னது நீதிமன்றம் வரை செல்லவில்லை... நீதிபதிகள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
23-ஜூலை-202114:30:43 IST Report Abuse
M S RAGHUNATHAN For Kind Attention of Honourable Court. The present MLAs of the ruling dispension, and of their allies have been told that they became MLAs because of the " பிச்சை " Of minorities. Indirectly this church father has called our honourable MLAs as beggars.
Rate this:
Cancel
23-ஜூலை-202113:05:13 IST Report Abuse
ஆரூர் ரங் மாநிலம் முழுவதும் எல்லா பஸ்களிலும் இவ்வசதி ஏற்படுத்தும் செலவைவிட👎 குறைந்த விலையில் ஆளுக்கு ஒரு 3 சக்கர மின் வாகனம் கொடுத்து🙏 விடலாமே . ஒரு மாற்றுத்திறனாளி பஸ்சில் ஏற சுமார் 3-5 நிமிடங்கள் ஆவது ஆகும். போக்குவரத்து ஸ்தம்பிக்கும். கோர்ட் சிந்திக்கலாம்
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
23-ஜூலை-202114:34:00 IST Report Abuse
Dhurveshசரி ஆரூர் ரங் BJP க்கு TN தேர்தல் செலவு 500 கோடி என்று CT ரவி சொன்னான் , இதற்க்கு பதில் சொல்லு நேர்மை என்று சொல்லி கொண்டு இனி தெரியாத எல்லாம் திருட்டு கூட்டம் தான , போகிற போக்கை பார்த்தல் BJP கலகங்களை மிஞ்சி விடுவார்கள் போல ஊழலில்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X