பொது செய்தி

தமிழ்நாடு

கவலைப் படாதீங்க நீங்க... வீட்டுக்கே வரோம் நாங்க...

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:ஆனைகட்டி வட்டாரத்தில் மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு வீடு, வீடாக சென்று, தடுப்பூசி போடும் பணியை, சுகாதாரத்துறை ஊழியர்கள் மேற்கொண்டனர்.ஆனைகட்டியில் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து, இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆஷா ஊழியர்கள்,
 கவலைப் படாதீங்க நீங்க... வீட்டுக்கே வரோம் நாங்க...

பெ.நா.பாளையம்:ஆனைகட்டி வட்டாரத்தில் மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு வீடு, வீடாக சென்று, தடுப்பூசி போடும் பணியை, சுகாதாரத்துறை ஊழியர்கள் மேற்கொண்டனர்.ஆனைகட்டியில் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினருக்கு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து, இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆஷா ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் விளக்கினர்.நேற்று, கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ஆனைகட்டி அருகே வடக்கலுாரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. ஏராளமான பழங்குடியின பெண்கள் சமூக இடைவெளியுடன் நின்று, தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதே பகுதியில் வயதான மற்றும் தடுப்பூசி மையத்திற்கு வர இயலாத பழங்குடியின பெண்களுக்கு, சுகாதார ஊழியர்கள், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று, தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர்.பணிகளை, கொண்டனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அஜய் தலைமையில், சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டனர். இன்னும் ஒரு சில நாட்களில் ஆனைகட்டி வட்டாரத்தில் உள்ள துாமனுார், சேம்புக்கரை, காட்டுவழி ஆகிய மலைக் கிராமங்களில் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என, சுகாதாரத்துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X