பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு 'இனிப்பான' சேதி கேளுங்க...

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் கரும்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க, கூடுதல் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோவை மாவட்டத்தில், 350 எக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கூடுதல்

பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் கரும்புக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க, கூடுதல் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோவை மாவட்டத்தில், 350 எக்டர் பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு பயிருக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், கூடுதல் மானியம் வழங்கப்பட உள்ளது. சொட்டு நீர்பாசனத்துக்கு, சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், மற்ற விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு, திறந்தவெளி கிணறு வாயிலாக மேற்பரப்பு சொட்டுநீர் பாசன கருவி அமைப்பதற்கு, வழக்கமான பயிர் மானியம், ஒரு எக்டருக்கு ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 133 ரூபாய் வழங்கப்படுகிறது. கூடுதல் மானியமாக, 38 ஆயிரம் ரூபாய், தரையின் கீழ் அமைக்கும்போது, 49 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.கரும்பு பயிரிடும் சிறு, குறு விவசாயிகளுக்கு, ஆழ்குழாய் கிணற்றில் வாயிலாக மேற்பரப்பு சொட்டுநீர் பாசன கருவி அமைப்பதற்கு, வழக்கமான பயிர் மானியம், ஒரு எக்டருக்கு ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 133 ரூபாய் வழங்கப்படுகிறது. கூடுதல் மானியமாக, 24 ஆயிரம் ரூபாயும் தரையின் கீழ் அமைக்கும்போது, 36 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் கார்டு நகல், நில வரைபடம், மூன்று புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களுடன்,அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை அணுகி, பெயரை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு, வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி தெரிவித்தார். தகவலுக்கு வேளாண்மை உதவி இயக்குனர்மீனாம்பிகை (நுண்ணீர் பாசனம்) 94426 35436 தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X