பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பு... தவற விடாதீங்க...!

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சூலுார்:மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், வருவாய்த்துறையிடம் இருந்து சிறு, குறு விவசாயி சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். சான்று பெற, வி.ஏ.ஓ., அலுவலகம், ஆர்.ஐ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என, விவசாயிகள் அலைய வேண்டிய நிலை இருக்கிறது. அவர்களின் அலைச்சலை போக்க, சிறப்பு முகாம் நடத்தி, சான்றுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

சூலுார்:மத்திய அரசின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், வருவாய்த்துறையிடம் இருந்து சிறு, குறு விவசாயி சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். சான்று பெற, வி.ஏ.ஓ., அலுவலகம், ஆர்.ஐ., அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என, விவசாயிகள் அலைய வேண்டிய நிலை இருக்கிறது. அவர்களின் அலைச்சலை போக்க, சிறப்பு முகாம் நடத்தி, சான்றுகளை வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. சூலுார் வட்டாரத்தில், சோமனுார் மற்றும் சூலுார் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில், நாளை காலை முகாம் நடக்கிறது.சூலுார் வட்டார வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:நுண்ணீர் பாசன திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள், தங்களது நில உடமை ஆவணங்களுடன், அருகில் உள்ள இ--சேவை மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.சோமனுார் மற்றும் சூலுார் ஆர்.ஐ., அலுவலகங்களில் நடக்கும் முகாமில், சிறு, குறு விவசாயி சான்றுகள் கேட்டு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு, உடனுக்குடன் சான்றுகள் வழங்க வருவாய்த்துறையும், வேளாண் மற்றும் உழவர்நலத்துறையும் ஏற்பாடு செய்துள்ளது. இதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.* கோவில்பாளையம், சரவணம்பட்டி மற்றும் கணபதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில், நாளை காலை 10:00 மணிக்கு, வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் சிறப்பு முகாம் நடக்கிறது. எஸ். எஸ்.குளம் வட்டார விவசாயிகள், சொட்டு நீர், தெளிப்பு நீர், மழைத்துாவான் அமைப்பதற்காக, சிறு குறு விவசாயிகள் சான்று மற்றும் இதர சான்றுகளை பெறலாம். தேவையான ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்கலாம் என, வட்டார வேளாண் உதவி இயக்குனர் நிர்மலா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X