சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா காவல் நீட்டிப்பு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு:பாலியல் புகாரில் சிக்கிய, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, மீது மூன்று மாணவியர் பாலியல் புகார் அளித்தனர்.இதையடுத்து, சிவசங்கர் பாபா மீது, 'போக்சோ' உள்ளிட்ட சில பிரிவுகளில் இரு

செங்கல்பட்டு:பாலியல் புகாரில் சிக்கிய, பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள, 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, மீது மூன்று மாணவியர் பாலியல் புகார் அளித்தனர்.இதையடுத்து, சிவசங்கர் பாபா மீது, 'போக்சோ' உள்ளிட்ட சில பிரிவுகளில் இரு வழக்குகள் பதியப்பட்டன.

சி.பி.சி.ஐ.டி., போலீசார், சிவசங்கர் பாபாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிவசங்கர் பாபா மீதான முதல் வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி தமிழரசி, ஆக., 5 வரை, பாபாவின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட சிவசங்கர் பாபா, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X