பொது செய்தி

தமிழ்நாடு

2 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியோர் பரிசோதனையின்றி பயணிக்கலாம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
சென்னை:'சென்னையில் இருந்து கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு செல்லும் விமான பயணியர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் போதும்; கொரோனா பரிசோதனை சான்று தேவை இல்லை' என, விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணுார்

சென்னை:'சென்னையில் இருந்து கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு செல்லும் விமான பயணியர், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை காண்பித்தால் போதும்; கொரோனா பரிசோதனை சான்று தேவை இல்லை' என, விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணுார் நகரங்களுக்கு, பயணியர் விமானத்தில் செல்கின்றனர். அதே போல, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை, புனே, அவுரங்காபாத் நகரங்களுக்கும் விமானங்களில் செல்கின்றனர்.

கொரோனா பரிசோதனைக்கான, ஆர்.டி.பி.சி.ஆர்., 'நெகட்டிவ்' சான்றிதழ் இருந்தால் மட்டுமே, விமானத்தில் பயணிக்க முடியும்.இந்நிலையில், மஹாராஷ்டிரா மற்றும் கேரளா செல்லும் பயணியருக்கு, விமான போக்குவரத்து துறை தளர்வு அளித்து உள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசிகள், இரண்டு தவணை செலுத்தியவர்கள், அதற்கான சான்றிதழ்களுடன், சென்னையிலிருந்து கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு விமானங்களில் பயணிக்கலாம்.அவர்களுக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் தேவையில்லை. ஆனால், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், பயண நேரத்திலிருந்து, 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட, ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X