அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுக்கு தாவிய பிற கட்சியினர்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியில், வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் தொண்டர்கள் 40 பேர் இணையும் விழா நடந்தது. பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் சத்தியராஜ் தலைமை வகித்தார்கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் பேசுகையில், ''மத்திய அரசு, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அறிவித்த பல்வேறு கடன் சலுகைகளால், கொரோனா காலத்திலும் சமாளித்து

அன்னுார்:அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியில், வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் தொண்டர்கள் 40 பேர் இணையும் விழா நடந்தது. பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் சத்தியராஜ் தலைமை வகித்தார்கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் பேசுகையில், ''மத்திய அரசு, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அறிவித்த பல்வேறு கடன் சலுகைகளால், கொரோனா காலத்திலும் சமாளித்து செயல்பட உதவியுள்ளது. இலவச சமையல் காஸ் இணைப்பு, விவசாயிகளுக்கு உதவித்தொகை, கழிப்பறைகள் கட்ட 12 ஆயிரம் என, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், கிராம மக்களுக்கு உதவியாக உள்ளன,'' என்றார். கஞ்சப்பள்ளி, அல்லப்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பல்வேறு கட்சியின், 40 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர். விவசாய அணி மாவட்ட செயலாளர் சுப்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் கார்த்தி, விமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X