பொது செய்தி

தமிழ்நாடு

'மாணவர்கள் வீட்ல இருந்தாலும் கண்டிப்பாக கிடைக்கும்'

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:கொரோனா பிரச்னையால் பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வீட்டிலேயே சத்துணவு சமைத்து சாப்பிட, அரிசி, பருப்பு, முட்டைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.மேட்டுப்பாளையம் தாலுகாவில், 124 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்தந்த பள்ளி வளாகம் அருகே அங்கன்வாடி மையமும் உள்ளது. துவக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில், மூட்டையுடன்

மேட்டுப்பாளையம்:கொரோனா பிரச்னையால் பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு வீட்டிலேயே சத்துணவு சமைத்து சாப்பிட, அரிசி, பருப்பு, முட்டைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன.மேட்டுப்பாளையம் தாலுகாவில், 124 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. அந்தந்த பள்ளி வளாகம் அருகே அங்கன்வாடி மையமும் உள்ளது. துவக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில், மூட்டையுடன் கூடிய, சத்துணவு மதியம் வழங்கப்பட்டது. அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டன. கொரோனா பரவலால், பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் மதிய உணவு சமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மாணவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும், கட்டாயம் சத்துணவு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டதை அடுத்து, ஒவ்வொரு மாணவர்களுக்கும், ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை வழங்கும் பணிகள் பள்ளிகளில் நடந்து வருகின்றன. இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், இரண்டு கிலோ, 100 கிராம் அரிசி, 840 கிராம் பருப்பு, 10 முட்டைகள் ஆகியவற்றை, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, சத்துணவு அமைப்பாளர் வழங்கி வருகிறார். இதேபோன்று, அங்கன்வாடி மையத்திலும் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X