இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

Added : ஜூலை 22, 2021
Share
சூலுார்;சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பூராண்டாம்பாளையத்தில், பரமேஸ்வரி என்பவரது வீட்டில் கடந்த, மே 5ம் தேதி 18 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு போனது. சூலுார் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, எஸ்.ஐ.,க்கள் பாண்டியராஜன், குப்புராஜ், ஏட்டு மகாராஜன், பிரபாகரன், பிரபு ஆகியோர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.கடந்த, 19ம் தேதி செலக்ரச்சல் பகுதியில்,
 இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

சூலுார்;சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பூராண்டாம்பாளையத்தில், பரமேஸ்வரி என்பவரது வீட்டில் கடந்த, மே 5ம் தேதி 18 சவரன் நகை மற்றும் பணம் திருட்டு போனது. சூலுார் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, எஸ்.ஐ.,க்கள் பாண்டியராஜன், குப்புராஜ், ஏட்டு மகாராஜன், பிரபாகரன், பிரபு ஆகியோர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.கடந்த, 19ம் தேதி செலக்ரச்சல் பகுதியில், வழக்கில் சம்பந்தப்பட்ட ராமு மற்றும் அவரது மனைவி இந்திராணி ஆகியோரை கைது செய்து, 13 சவரன் நகை மற்றும் ரூ.52 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். துரிதமாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை பிடித்த இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் தனிப்படையினரை, எஸ்.பி., செல்வநாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X