மேட்டுப்பாளையம்;10 நாட்களுக்கு மேலாகியும், காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போராட்டத்தை, கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காரமடை ஒன்றியத்தில் சீளியூர், வெள்ளியங்காடு, சிறுமுகை, சின்னகள்ளிபட்டி, இரும்பறை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஊராட்சி பகுதிகளிலும், கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த, 10 நாட்களாக காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடவில்லை.இதை கண்டித்து, நேற்று பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். பின், கன்னார்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், காலை, 8:00 மணிக்கு தடுப்பூசி போடப்படுகிறது என்று தகவல் தெரிவித்தால், அதன் பின் வேலைக்கு செல்ல முடிவதில்லை. அதனால், காலை, 6:00 மணிக்கு தெரிவிக்க வேண்டும். காரமடையில் உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிப்பதாக, போலீசார் தெரிவித்ததையடுத்து, முற்றுகை போராட்டத்தையும், மறியலையும் பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE