எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் : ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அறிவிப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 22, 2021 | கருத்துகள் (5+ 24)
Share
Advertisement
சென்னை :''தி.மு.க., அரசின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அ.தி.மு.க., தயாராக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வதை தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்தனர்.சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று மதியம், கட்சி ஒருங்கிணைப்பாளர்
தி.மு.க., அச்சுறுத்தல்,  தயார் : ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்.,

சென்னை :''தி.மு.க., அரசின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அ.தி.மு.க., தயாராக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வதை தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று மதியம், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள்மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின், ஓ.பி.எஸ்., அளித்த பேட்டி:அரசியல் ரீதியாக எங்களை சந்திக்க முடியாத தி.மு.க., அச்சுறுத்தும் வகையில் எங்களை எதிர்கொள்ள முடியாது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும், அதை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாராக உள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வதை, தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டப்பூர்வமான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாராக உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.
எந்த புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது, அது மிகப்பெரிய அபாயகரமான சூழலை, அரசியல் ரீதியில் உருவாக்க அடித்தளமாக அமையும்.சோதனை நடத்தப்படுவதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எந்தவித முகாந்திரமும் இல்லாமல், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நுழைந்துள்ளனர். இதற்கு பரிகாரம், நீதிமன்றம் வழியே பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இ.பி.எஸ்., கூறியதாவது:விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட மக்கள் உயர் கல்வி படிப்பதற்காக, ஜெயலலிதா பெயரில் பல்கலை அமைக்கப்படும் என, அறிவித்து நடைமுறைப்படுத்தினோம். தற்போது, உயர் கல்வித் துறை அமைச்சர், ஜெ., பல்கலை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும் என, அறிவித்துள்ளார். அவர், அந்த மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த மாவட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, ஜெ., பெயரில் பல்கலை இயங்கக் கூடாது என்பதற்காக, கல்லுாரிகளை அண்ணாமலை பல்கலையில் இணைக்க முயற்சிக்கிறார்.
நிதி நெருக்கடியை அமைச்சர், காரணமாகக் கூறுகிறார். நிதி இல்லாத நிலையில், மதுரையில் கருணாநிதி பெயரில் 200 கோடி ரூபாயில் நுாலகம் அமைக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்கு மட்டும் எப்படி நிதி வருகிறது?
இவ்வாறு அவர் கூறினார்.


உண்மையை சொல்லுங்கள் அரசுக்கு கோரிக்கை



அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா தொற்று தீவிரமாக இருந்த போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இறக்கவில்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது.முதல்வராக பொறுப்பேற்றதும், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், 'தமிழகம் ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன் செங்கல்பட்டில், 13 பேர் எதிர்பாராதவிதமாக இறந்திருக்கின்றனர்' என, குறிப்பிட்டுள்ளார்.முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதையும், அமைச்சர் பேட்டியையும் ஒப்பிட்டு பார்த்தால், முரண்பாடு தெள்ளத் தெளிவாகிறது. பிரதமருக்கு கடிதம் வாயிலாக முதல்வர் தெரிவித்த கருத்து உண்மையா; மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டியில் தெரிவித்த தகவல் உண்மையா என்பதை விளக்க வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உண்டு.

எனவே, முதல்வர் இது குறித்து உடனடியாகஆராய்ந்து, உண்மை நிலையை, தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூலை-202119:06:47 IST Report Abuse
அப்புசாமி எல்லாத்தூக்கும்தயார்னு சொல்ல வேண்டியதுதான். வேறு வழி? தமிழக பா.ஜ வும் இதைத்தான் சொல்லுது.
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-ஜூலை-202113:54:59 IST Report Abuse
Visu Iyer இவுங்க சின்னம்மா காலிலும் விழ மாட்டாங்க தனது சொந்த காலிலும் நிற்க மாட்டாங்க.. இவர்களை அரசியல் வாதிகள் என்று சொல்வதை விட....?
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
23-ஜூலை-202113:53:39 IST Report Abuse
Visu Iyer இது அச்சுறுத்தல் இல்லை. அம்மா வழியில் ஆட்சி என்றால் அம்மா வழியில் ஊழல் தானே.. சட்டம் தன கடமையை செய்கிறது.. சட்டத்தின் கடமையை கட்டி போட நினைக்கும் இவர்களை அரசியல் வரலாற்றில் இருந்தே அடியோடு நீக்கி விட வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X