ரோட்டில் மின் கம்பம்: ஓட்டுனர்கள் அதிருப்தி| Dinamalar

ரோட்டில் மின் கம்பம்: ஓட்டுனர்கள் அதிருப்தி

Added : ஜூலை 22, 2021 | |
வால்பாறை:வால்பாறையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை இடம் மாற்றியமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அய்யர்பாடி மருத்துவமனை அருகே, ரோடு விரிவுபடுத்தும் பணி நடந்தது.பணி நிறைவடைந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் இருந்த மின்கம்பம் இடம்
 ரோட்டில் மின் கம்பம்: ஓட்டுனர்கள் அதிருப்தி

வால்பாறை:வால்பாறையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை இடம் மாற்றியமைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அய்யர்பாடி மருத்துவமனை அருகே, ரோடு விரிவுபடுத்தும் பணி நடந்தது.பணி நிறைவடைந்த நிலையில், போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் இருந்த மின்கம்பம் இடம் மாற்றம் செய்யவில்லை.இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள், மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை இடம் மாற்றியமைக்க மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X