காட்சிப்பொருளான கேமராக்கள் :குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு| Dinamalar

காட்சிப்பொருளான கேமராக்கள் :குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு

Added : ஜூலை 22, 2021 | |
வால்பாறை:வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப்பொருளாக மாறியுள்ளதால், குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், பொதுமக்கள் ஒத்துழைப்புடன், 32 இடங்களில், கடந்த 2019ம் ஆண்டு, அப்போதைய இன்ஸ்பெக்டர் முருகேசன் முயற்சியால், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.அதன்பின்,

வால்பாறை:வால்பாறை போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிப்பொருளாக மாறியுள்ளதால், குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், பொதுமக்கள் ஒத்துழைப்புடன், 32 இடங்களில், கடந்த 2019ம் ஆண்டு, அப்போதைய இன்ஸ்பெக்டர் முருகேசன் முயற்சியால், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.அதன்பின், வால்பாறையில் ஏ.டி.எம்., கொள்ளை, மது சில்லிங், கஞ்சா விற்பனை போன்றவைகளை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவில் கண்டறிந்தனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளாக வால்பாறையில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக வால்பாறை போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள, கண்காணிப்பு கேமரா செயல்படுவதில்லை.இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியிடம் கேட்டபோது, 'வால்பாறையில் மழை பெய்வதால், கண்காணிப்பு கேமரா சரி செய்வதில் தாமதம் எற்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, விரைவில் அனைத்து கேமராக்களும் சரி செய்யப்படும்,' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X