பொது செய்தி

தமிழ்நாடு

பொருளாதார மேம்பாடு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரமேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருநபருக்கு மட்டும் கடன் உதவி வழங்கப்படும். தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம், 6 சதவீதம் வட்டியிலும், பெண்களுக்கு புதிய பொற்கால திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் வரை

ராமநாதபுரம் : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரமேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருநபருக்கு மட்டும் கடன் உதவி வழங்கப்படும். தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம், 6 சதவீதம் வட்டியிலும், பெண்களுக்கு புதிய பொற்கால திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவினர் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் மேலும் கடன்பெறலாம்.

அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கூட்டுறவுவங்கியில் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.-----------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X