ஆதார் பதிவு மையங்களுக்கு வரும் மக்கள் அலைக்கழிப்பு!| Dinamalar

ஆதார் பதிவு மையங்களுக்கு வரும் மக்கள் அலைக்கழிப்பு!

Added : ஜூலை 22, 2021 | |
திருப்புத்துார் : மாவட்டத்தில் ஆதார் பதிவு மையங்களில் போதிய ஊழியர்களின்றி பணிகள் மந்த நிலையில் நடப்பதால் ஆதார் கார்டு பெறுவதற்காக மையங்களுக்கு வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.வங்கி கணக்கு துவக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு பணிக்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது. இதற்காக மக்கள் ஆதார் கார்டுக்கு பதிவு செய்தல், அடிக்கடி அலைபேசி எண் மாற்றம்,

திருப்புத்துார் : மாவட்டத்தில் ஆதார் பதிவு மையங்களில் போதிய ஊழியர்களின்றி பணிகள் மந்த நிலையில் நடப்பதால் ஆதார் கார்டு பெறுவதற்காக மையங்களுக்கு வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.வங்கி கணக்கு துவக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு பணிக்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது. இதற்காக மக்கள் ஆதார் கார்டுக்கு பதிவு செய்தல், அடிக்கடி அலைபேசி எண் மாற்றம், போட்டோ, விரல்ரேகை, கண் விழி மாற்றம், ஆதார் முகவரி மாற்றம் உட்பட பல்வேறு பணிகளை மக்கள் அன்றாடம் செய்வதற்காக ஆதார் மையங்களில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.

அந்தந்த தாலுகா அலுவலகங்களில் அமைக்கப்படும் ஆதார் மையங்களில் மக்கள் வருகைக்கு ஏற்ப ஊழியர்களை நியமித்து, உடனுக்குடன் பதிவு செய்து அனுப்புவதில்லை. ஒரு மையத்தில் ஊழியர் ஒருவர் 20 பேருக்கு மட்டுமே ஆதார் பதிவு, முகவரி மாற்றம் போன்ற பணிகளை செய்கின்றனர். ஒரு மையத்தில் 2 ஊழியர் இருந்தால் நாள் ஒன்றுக்கு 40 பேர் மட்டுமே ஆதார் பதிவினை செய்ய முடியும்.

ஆனால் ஒவ்வொரு மையத்திலும் நுாற்றுக்கணக்கில் காத்திருக்கின்றனர். இதனால் இன்று போய் நாளை வா என்ற வார்த்தைகளை ஆதார் மைய ஊழியர்கள் மக்களிடம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆதார் பதிவினை செய்து முடிக்க மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே மக்கள் தொகைக்கு ஏற்ப ஆதார் மையங்களை பரவலாக அதிகரிக்க வேண்டும்.

இ-சேவை மையம், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் போன்றவற்றில் பொது சேவை மையம் துவக்கி ஆதார் பதிவு பணியை விரிவுபடுத்தலாம். மேலும் தபால் அலுவலகங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆதார் பதிவு மையங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட மக்கள் வலியுறுத்துகின்றனர்.


சேவை மையத்தில் ஆதார் பதிவு

மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், அரசு கேபிள் டி.வி., மகளிர் திட்டம், தொழில் முனைவு மையங்கள் என 332 இடங்களில் பொது சேவை மையங்கள் செயல்படுகின்றன. இதில் எந்த மையத்திலும் ஆதார் பதிவு பணி நடக்கவில்லை. அதற்கான ஆதார் சிறப்பு தேர்வெழுதிய ஆபரேட்டர்களும் இல்லை. ஆதார் தேர்வு பெற்ற ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளித்து பொது சேவை மையங்களில் நியமித்து இங்கு ஆதார் பதிவு பணியை செயல்படுத்தினால் கிராமப்புற மக்கள் அலைவது தவிர்க்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X