பொது செய்தி

தமிழ்நாடு

ஆழியாறு கவியருவியில் 'பார்க்கிங்' :யானைகளை கண்காணிக்க முகாம்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆழியாறு கவியருவி அருகே, வனத்துறையினர் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆழியாறு கவியருவியில் வனத்துறையினர் கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். வனவிலங்குகளின் படங்கள் வரைந்து, கம்பித்தடுப்புகள் அமைத்து, கழிப்பிட வசதி ஏற்படுத்தியுள்ளனர்.மேலும், சோதனைச்சாவடி அருகில், சுற்றுலா
 ஆழியாறு கவியருவியில் 'பார்க்கிங்' :யானைகளை கண்காணிக்க முகாம்

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆழியாறு கவியருவி அருகே, வனத்துறையினர் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆழியாறு கவியருவியில் வனத்துறையினர் கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். வனவிலங்குகளின் படங்கள் வரைந்து, கம்பித்தடுப்புகள் அமைத்து, கழிப்பிட வசதி ஏற்படுத்தியுள்ளனர்.மேலும், சோதனைச்சாவடி அருகில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்து வருகின்றனர்.வழக்கமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் போது, கவியருவி அருகிலும், சோதனைச்சாவடி அருகிலும், 'பார்க்கிங்' இல்லாததால் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால், வால்பாறை ரோட்டில் போக்குவரத்து பாதித்து, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறையினர், ஆழியாறு சோதனைசமசாவடி மற்றும் கவியருவி அருகே, 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தி வருகின்றனர்.கவியருவி அருகே அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்கின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கவும், கவியருவி 'பார்க்கிங்' அருகே வேட்டைத்தடுப்பு முகாம் அமைத்து வருகின்றனர். விரைவில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X