கொரோனா 3ம் அலையை சமாளிக்க 2 லட்சம் குப்பி ரெம்டெசிவிர் கையிருப்பு!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா 3ம் அலையை சமாளிக்க 2 லட்சம் குப்பி ரெம்டெசிவிர் கையிருப்பு!

Added : ஜூலை 22, 2021
Share
சென்னை:கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை சமாளிப்பதற்காக, தமிழகத்தில், 2 லட்சம் குப்பி ரெம்டெசிவிர் ஊசி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், இந்தாண்டு மே மாதம் முதல், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் துவங்கி, ஜூனில் உச்சத்தை தொட்டது.கடும் தட்டுப்பாடுமூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பலரும்,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன்

சென்னை:கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை சமாளிப்பதற்காக, தமிழகத்தில், 2 லட்சம் குப்பி ரெம்டெசிவிர் ஊசி மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், இந்தாண்டு மே மாதம் முதல், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவல் துவங்கி, ஜூனில் உச்சத்தை தொட்டது.


கடும் தட்டுப்பாடு

மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட பலரும்,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் தவித்தனர்.மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்பட்டது.

இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அல்லாடியதால், அரசே மருந்து விற்பனையில் ஈடுபட்டது. 6 குப்பி மருந்து, 9,408 ரூபாய்க்கு வழங்கப்பட்டது.கள்ளச்சந்தையில் ஒரு குப்பி மருந்து, 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக புகார் எழுந்தது.


கறுப்பு பூஞ்சை

இதையடுத்து, தனியார் மருத்துவமனைகள், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை, 'ஆன்லைன்' வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ள, அரசு ஏற்பாடு செய்தது. கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததால், ரெம்டெசிவிர் மருந்து பயன்பாடும் குறைந்து விட்டது.இந்நிலையில், தமிழகத்தில் செப்டம்பரில் கொரோனா மூன்றாவது அலை தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதைஎதிர்கொள்ள வசதியாக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவ பணிகள் கழகத்தின், 32 குடோன்களில், 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. இந்த மருந்துகளை, அடுத்தாண்டு ஜூன் வரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

இதேபோல, கொரோனா தொற்றுக்கு பின், கண்களை பாதிக்கும் கறுப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்க தேவையான, ஆம்போடெரிசின் - பி மருந்தும், போதிய அளவில் இருப்பில் உள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X