பொது செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக வாய்ப்பு! ஆக., 7ம் தேதி நேர்காணல்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி;பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட, முகவர் பணிக்கு வரும், ஆக., 7ம் தேதி நேர்காணல் நடக்கிறது.பொள்ளாச்சி கோட்ட தபால் கண்காணிப்பாளர் ஜகாங்கீர் அறிக்கை:தபால்துறையில், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில், அதிக எண்ணிக்கையில் பாலிசிதாரர்கள்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட, முகவர் பணிக்கு வரும், ஆக., 7ம் தேதி நேர்காணல் நடக்கிறது.பொள்ளாச்சி கோட்ட தபால் கண்காணிப்பாளர் ஜகாங்கீர் அறிக்கை:தபால்துறையில், அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்கள் செயல்படுகின்றன. இத்திட்டத்தில், அதிக எண்ணிக்கையில் பாலிசிதாரர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான பிரிமீய தொகை நேரடியாகவும், ஏஜன்ட்கள் வாயிலாகவும் வசூலிக்கப்படுகிறது.இத்திட்டத்தில், பாலிசிதாரர்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்கும் நடவடிக்கையாக, முகவர் பணியிடத்துக்கு, பொள்ளாச்சி கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும், ஆக., 7ம் தேதி காலை, 10:00 மணிக்கு நேர்காணல் நடக்கிறது.ஆர்வமுள்ளவர்கள் வயது, கல்வி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையின் நகல்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன், தங்களை பற்றிய சுய விபரங்களுடன் கலந்து கொள்ளலாம்.இப்பணிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 - 50 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆயுள் காப்பீடு திட்ட முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படை வீரர்கள், மகிளா மண்டல் பணியாளர்கள், சுய தொழில் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.தேர்வு செய்யப்படும் முகவர்கள், கள அலுவலர்கள் பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் பணிபுரிய வேண்டும். இப்பணிக்கு, 5,000 ரூபாயை கிஷான் விகாஸ் அல்லது தேசிய சேமிப்பு பத்திர சான்றிதழை டிபாசிட் ஆக செலுத்த வேண்டும். கூடுதல் விபரங்களுக்கும், விண்ணப்பம் பெறுவதற்கும் அருகில் உள்ள தபால் அலுவலகங்களை அணுகலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X