பொது செய்தி

தமிழ்நாடு

சிறுத்தை நடமாட்டம் தவிர்க்க ஆலோசனை: திறந்தவெளியில் இறைச்சிக்கழிவு கொட்டாதீங்க

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வால்பாறை:திறந்தவெளியில் மாமிசக்கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என, மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவின் பேரில், உதவி வனப்பாதுகாவலர்கள் பிரசாந்த், செல்வம் ஆகியோர் தலைமையில், மனித -- வனவிலங்கு மோதல் தடுப்புக்குழு ஆலோசனைக்கூட்டம், அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில்
 சிறுத்தை நடமாட்டம் தவிர்க்க ஆலோசனை: திறந்தவெளியில் இறைச்சிக்கழிவு கொட்டாதீங்க

வால்பாறை:திறந்தவெளியில் மாமிசக்கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என, மனித - வனவிலங்கு மோதல் தடுப்புக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் உத்தரவின் பேரில், உதவி வனப்பாதுகாவலர்கள் பிரசாந்த், செல்வம் ஆகியோர் தலைமையில், மனித -- வனவிலங்கு மோதல் தடுப்புக்குழு ஆலோசனைக்கூட்டம், அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் நடந்தது.கூட்டத்தில், வால்பாறை தாசில்தார் ராஜா, நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார், வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் மகேஷ்ஆனந்தி உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், வால்பாறை நகரில் சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த, வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் இறைச்சிக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் வேறு இடத்தில் கொட்டி அழிக்க வேண்டும்.சிறுத்தை நடமாட்டத்தை குறைக்க, நகரில் உள்ள புதர்களை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும். வால்பாறை நகரில் கூடுதல் தெருவிளக்கு அமைப்பதோடு, எரியாத மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும்.தங்கும் விடுதிகளில் சுற்றுலாபயணிகளை இரவு, 8:00 மணிக்கு மேல் வெளியில் அழைத்துச் செல்லக்கூடாது. டாஸ்மாக் கடைகள் இரவு, 7:00 மணிக்கு மேல் திறக்க அனுமதிக்க கூடாது. அரசு மருத்துவமனையை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி, தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்.சிறுத்தை நடமாட்டம், அவற்றின் வாழ்விடம் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X