பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடையும் அரசு மாணவர் விடுதிகள்

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருப்புவனம் : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவியர்கள் விடுதிகள் கடந்த ஓராண்டாக செயல்படாமல் இருப்பதால் சேதமடைந்துள்ளன.சிவகங்கை மாவட்டத்தில் 48 ஆதிதிராவிடர் நல விடுதியும், 55 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விடுதியிலும் 75 முதல் 300 மாணவ, மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வந்தனர். பள்ளி

திருப்புவனம் : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவியர்கள் விடுதிகள் கடந்த ஓராண்டாக செயல்படாமல் இருப்பதால் சேதமடைந்துள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில் 48 ஆதிதிராவிடர் நல விடுதியும், 55 பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு விடுதியிலும் 75 முதல் 300 மாணவ, மாணவியர்கள் தங்கி கல்வி பயின்று வந்தனர். பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாதத்திற்கு 900 ரூபாயும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாயும் உணவிற்காக செலவிடப்படுகிறது. இதில் வாரத்திற்கு ஐந்து முட்டை, வாரம் ஒரு நாள் கோழி இறைச்சி, ஆடு இறைச்சி வழங்கவேண்டும்.

கடந்தாண்டு பொருட்கள் வந்த நிலையில் ஊரடங்கால் அரிசி, பருப்பு தரமற்று போய்விட்டன. இதற்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் இன்று வரை அரசு அறிவிக்கவில்லை. விடுதி வார்டன்கள் பலரும் வாங்கிய பொருட்கள் குறித்து அரசிடம் அறிக்கை அனுப்பியும் இன்னும் பதில் வரவில்லை. ஓராண்டுக்கு மேல் செயல்படாததால் விடுதிகளை சுற்றிலும் புதர் மண்டியும், சுற்றுச்சுவர் சேதமுற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X