கோயில் வாசலில் தேங்கும் குப்பை; பக்தர்கள் விரக்தி

Added : ஜூலை 22, 2021 | |
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கோயில் வாசல் பகுதியில் தேங்கும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறதுஇங்குள்ள பழமையான சேவுகப்பெருமாள் ஐயனார் கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளில் மண்டபங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளன. கோயில் பகுதியில் ஆதரவற்ற சிலர் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இக்கோயிலைச் சுற்றி தினமும் பாலிதீன்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் கோயில் வாசல் பகுதியில் தேங்கும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது

இங்குள்ள பழமையான சேவுகப்பெருமாள் ஐயனார் கோவிலை சுற்றியுள்ள ரத வீதிகளில் மண்டபங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் உள்ளன. கோயில் பகுதியில் ஆதரவற்ற சிலர் தங்கி யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இக்கோயிலைச் சுற்றி தினமும் பாலிதீன் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும் கழிவுகளும் தேங்குகிறது. இதை கோயில் நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. இதனால் கோயில் அருகே துர்நாற்றம் வீசுகிறது.

இது அங்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு உள்ளது. அதேபோல் இப்பகுதியில் தங்கி ஆதரவற்ற நிலையில் சிலர் இறக்கும் நிலையில், அப்பகுதியை சுத்தப்படுத்தாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதையும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுகொள்வதில்லை. எனவே கோயில் நிர்வாகமும் பேரூராட்சி நிர்வாகமும் இணைந்து இப்பகுதியில் தினசரி குப்பைகளை அகற்றி கோயில் வாசல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X