ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பஸ்களில் மே 8 முதல் இதுவரை 11 லட்சத்து 20 ஆயிரத்து 431 பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இழப்பு ரூ.1.12 கோடியாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரத்தில் இரண்டு, ராமேஸ்வரம், பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி ஆகிய 6 போக்குவரத்து கிளைகள் உள்ளன.இவற்றில் இருந்து 200 புறநகர் பஸ்கள், 119 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற மாவட்டங்கள் போல் இன்றி மாவட்டத்தில் 119 பஸ்களும் சாதாரண கட்டணத்தில் இயங்குபவை.இதனால் இங்கு அதிகஅளவில் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர்.
கொரோனா ஊரடங்கால் ஒரு மாதத்திற்கும் மேலாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இருந்தும் மே 8 முதல் ஜூலை 21 வரை அரசு டவுன் பஸ்களில் 11 லட்சத்து 14 ஆயிரத்து 662 பெண்கள், 5211 மாற்றுத்திறனாளிகள், அவர்களுக்கான உதவியாளர்கள் 292 பேர், திருநங்கைகள் 266 பேர், என 11 லட்சத்து 20 ஆயிரத்து 431 பேர் இலவச பயணம் செய்துள்ளனர்.
இதன் மூலம் மாவட்ட போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.1 கோடியே 12 லட்சம் இழப்பு ஏற்பட்டுஉள்ளதாகவும், தற்போதைய நிலையில் தினசரி 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பேர் பயணம் செய்வதாக அரசு பஸ் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE