சொகுசு கார் நுழைவு வரி விவகாரம் விஜய் வழக்கை பட்டியலிட உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொகுசு கார் நுழைவு வரி விவகாரம் விஜய் வழக்கை பட்டியலிட உத்தரவு

Added : ஜூலை 22, 2021
Share
சென்னை, ஜூலை 23-சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில், ௧ லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2012ல், பிரிட்டனில் இருந்து, 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை, நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு, நுழைவு வரி விதிக்க தடை கோரி, உயர்

சென்னை, ஜூலை 23-சொகுசு காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரிய வழக்கில், ௧ லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2012ல், பிரிட்டனில் இருந்து, 'ரோல்ஸ் ராய்ஸ்' காரை, நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு, நுழைவு வரி விதிக்க தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் விஜய் மனு தாக்கல் செய்தார்.மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ௧ லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க, விஜய்க்கு உத்தரவிட்டார். 'நடிகர்கள் முறையாக வரி செலுத்தவும், 'ரியல் ஹீரோ'வாக இருக்க வேண்டும்; 'ரீல் ஹீரோ'வாக இருக்கக் கூடாது' என்றும் தெரிவித்தார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு செய்தார். நுழைவு வரி விலக்கு கேட்டு, ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்ததால், தானும் வழக்கு தொடர்ந்ததாகவும், தன்னை பற்றி உத்தரவில் கூறியிருந்த விமர்சனங்களை நீக்கவும், மனுவில் கோரியிருந்தார்.நீதிமன்ற உத்தரவின் நகல் இல்லாமல், இணையதள நகலுடன் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கி, விசாரணைக்கு பட்டியலிடும்படி, கூடுதல் மனுவும் தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் எம்.துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விஜய் தரப்பில், வழக்கறிஞர் குமரேசன் ஆஜரானார். மேல்முறையீட்டு மனுவை விரைவில் விசாரிக்க கோரினார். இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவுக்கு எண் வழங்கும் நடைமுறையை முடித்து, விசாரணைக்கு பட்டியலிடும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X