மழைப்பொழிவால் செழிப்பானது உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி:வனமெங்கும் பசுமை; வயலெங்கும் தக்காளி!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழைப்பொழிவால் செழிப்பானது உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி:வனமெங்கும் பசுமை; வயலெங்கும் தக்காளி!

Added : ஜூலை 22, 2021
Share
ஆனைமலை;ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதிலும், கனமழை பெய்வதால், வனவிலங்குகளுக்கு போதிய அளவு நீர் மற்றும் உணவு கிடைத்துள்ளது. வனத்தில் காணுமிடமெல்லாம் பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது.மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. அதற்கு, யானை, சிறுத்தை, கடமான், வரையாடுகள், பறவைகள் என, பல்வேறு வனவிலங்குகள் முக்கிய காரணமாக
மழைப்பொழிவால் செழிப்பானது உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி:வனமெங்கும் பசுமை; வயலெங்கும் தக்காளி!

ஆனைமலை;ஆனைமலை புலிகள் காப்பகம் முழுவதிலும், கனமழை பெய்வதால், வனவிலங்குகளுக்கு போதிய அளவு நீர் மற்றும் உணவு கிடைத்துள்ளது. வனத்தில் காணுமிடமெல்லாம் பச்சைப்பசேலென காட்சியளிக்கிறது.
மேற்குத்தொடர்ச்சி மலையின் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலமான ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. அதற்கு, யானை, சிறுத்தை, கடமான், வரையாடுகள், பறவைகள் என, பல்வேறு வனவிலங்குகள் முக்கிய காரணமாக உள்ளன.வனப்பகுதிகளிலுள்ள சிற்றோடை, ஓடைகளில் தேங்கும் தண்ணீரையும், வனத்திலுள்ள தாவரங்களையும் உட்கொண்டு, தாவர உண்ணிகள் வாழ்கின்றன. இந்நிலையில், மார்ச் மாதம் முதல், கோடை காலம் நிலவியதால் வனத்தில் வறட்சி ஏற்பட்டு, வனவிலங்குகள் குடிநீர், உணவு கிடைக்காமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகின.இதையடுத்து, வனப்பகுதியில் கட்டியுள்ள கசிவுநீர் குட்டை, தொட்டிகளில் நீர் நிரப்பி வனவிலங்குகள் தாகம் தீர்க்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும், நீர், உணவு பற்றாக்குறையால் யானைகள், கடமான் வனத்தையொட்டிய பட்டா நிலங்களில் புகுந்து வந்தன.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக, புலிகள் காப்பகம் முழுவதிலும் மழை பெய்வதால், சிற்றோடை, ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. வனப்பகுதியில் காணுமிடமெல்லாம் புற்கள் முளைத்து, வனவிலங்குகளுக்கு தேவையான தாவரங்களின் அடர்த்தியும் அதிகரித்து வருகிறது.வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் தேவை பூர்த்தியானதால், அவைகள் வனத்தை விட்டு வெளியேறுவதும் குறைந்துள்ளது. இதனால், மலையடிவாரத்திலுள்ள விவசாயிகள் நிம்மதியடைந்துள்ளனர். ஆழியாறு, நவமலை, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளும் பசுமையாக காட்சியளிப்பதால், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X