பொது செய்தி

தமிழ்நாடு

இடைவிடாது கொட்டும் மழை: சோலையாறு நீர்மட்டம் கிடுகிடு

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
வால்பாறை:வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.பலத்த காற்றுடன், இடைவிடாது பெய்யும் கனமழையால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 1,425
 இடைவிடாது கொட்டும் மழை: சோலையாறு நீர்மட்டம் கிடுகிடு

வால்பாறை:வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்யும் நிலையில், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.பலத்த காற்றுடன், இடைவிடாது பெய்யும் கனமழையால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மேல்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 1,425 கனஅடி தண்ணீரும், கீழ்நீராறு அணையிலிருந்து வினாடிக்கு, 135 கனஅடி தண்ணீரும், சோலையாறு அணைக்கு திறந்துவிடப்படுகிறது.இதனால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 152.59 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,258 கனஅடி தண்ணீர் வரத்தும், 565 கனஅடி தண்ணீர் வெளியேற்றமும் இருந்தது. சோலையாறில், கடந்த, 1ம் தேதி 107 அடி நீர்மட்டம் இருந்தது. கடந்த, 22 நாளில், 45 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்):வால்பாறை - 31, சோலையாறு - 30, மேல்நீராறு - 45, கீழ்நீராறு - 27, பரம்பிக்குளம் - 20, ஆழியாறு - 2, காடம்பாறை - 11, நவமலை - 3, பெருவாரிப்பள்ளம் -10, வேட்டைக்காரன்புதுார் - 11, துாணக்கடவு - 11, சர்க்கார்பதி - 8, மணக்கடவு - 23, பொள்ளாச்சி - 33, பெதப்பம்பட்டி - 22, நெகமம் - 22, என்ற அளவில் மழை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X