பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு டவுன் பஸ்களில் இலவச டிக்கெட் வழங்குவதால், பெண் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில், தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், சொகுசு மற்றும் தாழ்தள பஸ்கள் தவிர்த்த சாதாரண கட்டண டவுன் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டத்தை அறிவித்தது. பொள்ளாச்சி கோட்டத்தில், சொகுசு டவுன் பஸ்கள் இல்லாததால், அனைத்து டவுன் பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர்.ஆரம்ப கட்டத்தில், பெண் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. தற்போது, தொற்று பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியதால், பெண் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.இத்திட்டம் அமலுக்கு வரும் முன், வழக்கமாக டவுன் பஸ்களில், 30 சதவீதம் எண்ணிக்கையில் சராசரியாக பெண்கள் பயணிப்பர். தற்போது இந்த எண்ணிக்கை, 15 சதவீதம் வரை அதிகரித்து, 45 சதவீதம் வரை பெண்கள் பயணிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE