பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர், மின்சாரம் தட்டுப்பாடு தவிர்க்க ஆலோசனை கூட்டம் 

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
திருவாடானை : குடிநீர், மின்சார தட்டுப்பாட்டை போக்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு எம்.எல்.ஏ., கருமாணிக்கம்தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புகண்ணன், பாண்டி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப்செல்வராஜ், காவிரி நீர் திட்ட

திருவாடானை : குடிநீர், மின்சார தட்டுப்பாட்டை போக்குவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு எம்.எல்.ஏ., கருமாணிக்கம்தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்புகண்ணன், பாண்டி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜோசப்செல்வராஜ், காவிரி நீர் திட்ட அலுவலர் தினேஷ்குமார், கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி தலைவர்கள் பேசியதாவது: அனைத்து கிராமங்களிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காவிரி நீர் செல்லாத கிராமங்கள் நிறைய உள்ளன. சேதமடைந்த மின்வயர்கள், சாய்ந்த மின்கம்பங்களும் நிறைய உள்ளன. ஆகவே குடிநீர், மற்றும் மின்தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X