இரட்டைமடியில் மீன்பிடிப்பு; ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்| Dinamalar

இரட்டைமடியில் மீன்பிடிப்பு; ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்

Added : ஜூலை 22, 2021 | |
ராமேஸ்வரம் : இரட்டைமடியில் மீன்பிடித்த 5 படகுகளை திருமுகத்திலிருந்து வெளியேற்ற கோரி இன்று (ஜூலை 23)முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.ஜூலை 17, 21ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 விசைப்படகுகள் தடைசெய்த இரட்டைமடியில் மீன்பிடித்ததாக மீனவர் சங்க நிர்வாகிகள் புகார் செய்தனர்.இதில் 9 படகுகள் மீன்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மீன்பிடிக்க

ராமேஸ்வரம் : இரட்டைமடியில் மீன்பிடித்த 5 படகுகளை திருமுகத்திலிருந்து வெளியேற்ற கோரி இன்று (ஜூலை 23)முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.

ஜூலை 17, 21ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 14 விசைப்படகுகள் தடைசெய்த இரட்டைமடியில் மீன்பிடித்ததாக மீனவர் சங்க நிர்வாகிகள் புகார் செய்தனர்.இதில் 9 படகுகள் மீன்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன், மானிய டீசலை மீன்துறையினர் ரத்து செய்தனர்.மீதமுள்ள 5 படகுகள் மீன்துறை, பாதுகாப்பு படையினருக்கு தெரியாமல்திருட்டுத்தனமாக மீன்பிடித்து வருவதால், கடல்வழி பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.

இந்த 5 படகுகளை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றக்கோரி இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்வது, ஜூலை 26ல் மீன்துறை அலுவலகம்முன் ஆர்ப்பாட்டம் செய்வது என மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில், மீனவர் சங்க தலைவர்கள் போஸ், தட்சிணாமூர்த்தி, மகத்துவம், சேசு, பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X