பொது செய்தி

தமிழ்நாடு

சந்தையில் பரிசோதனை முகாம்; தொற்று பரவல் தடுக்க நடவடிக்கை

Added : ஜூலை 22, 2021
Share
Advertisement
உடுமலை:தினசரி சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு நகராட்சி சுகாதாரத்துறை சார்பில், நேற்று கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடந்தது.உடுமலை ராஜேந்திரா ரோட்டில், நகராட்சி தினசரி சந்தை அமைந்துள்ளது. இங்குள்ள காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு, சுற்றுப்பகுதியிலிருந்து நாள்தோறும், தக்காளி, கத்தரி உட்பட காய்கறிகளை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.அதே போல், பழநி,
 சந்தையில் பரிசோதனை முகாம்;  தொற்று பரவல் தடுக்க நடவடிக்கை

உடுமலை:தினசரி சந்தைக்கு வரும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு நகராட்சி சுகாதாரத்துறை சார்பில், நேற்று கொரோனா தொற்று பரிசோதனை முகாம் நடந்தது.உடுமலை ராஜேந்திரா ரோட்டில், நகராட்சி தினசரி சந்தை அமைந்துள்ளது. இங்குள்ள காய்கனி கமிஷன் மண்டிகளுக்கு, சுற்றுப்பகுதியிலிருந்து நாள்தோறும், தக்காளி, கத்தரி உட்பட காய்கறிகளை விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.அதே போல், பழநி, மறையூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, வியாபாரிகள், கொள்முதலுக்காக வந்து செல்கின்றனர்.இவ்வாறு, பிசியான தினசரி சந்தை, வாயிலாக தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள், நகராட்சி, சுகாதாரத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வகையில், நேற்று, சிறப்பு மருத்துவ குழுவினர், சந்தைக்கு வந்த, விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு, கொரோனா தொற்று பரிசோதிக்கப்பட்டது.மேலும், தொற்றுப்பரவலை தவிர்க்க, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உட்பட விழிப்புணர்வும், மேற்கொள்ளப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X