சித்து இன்று பொறுப்பேற்பு :முதல்வர் அமரீந்தரும் விழாவில் பங்கேற்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சண்டிகர் :பஞ்சாபில் இன்று மாநில காங்., தலைவராக நவ்ஜோத் சிங் சித்து பொறுப்பேற்கும் விழாவில் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்க உள்ளார்.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. முதல்வர் அமரீந்தருக்கும், மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.இந்த
சித்து இன்று பொறுப்பேற்பு முதல்வர் அமரீந்தர், பங்கேற்பு

சண்டிகர் :பஞ்சாபில் இன்று மாநில காங்., தலைவராக நவ்ஜோத் சிங் சித்து பொறுப்பேற்கும் விழாவில் முதல்வர் அமரீந்தர் சிங் பங்கேற்க உள்ளார்.

பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. முதல்வர் அமரீந்தருக்கும், மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது.
இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சமீபத்தில் பஞ்சாப் மாநில காங்., தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். மேலும், நான்கு செயல் தலைவர்களும் அப்போது நியமிக்கப்பட்டனர்.அமரீந்தரின் எதிர்ப்பை மீறி சித்து நியமிக்கப்பட்டது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.


latest tamil news




பின் இருவரின் சந்திப்பும் நிகழும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும் தன்னை அவதுாறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கும் வரை, சித்துவை சந்திக்கப்போவது இல்லை என, அமரீந்தர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.இதற்கிடையே மாநில காங்., தலைவராக சித்து இன்று பொறுப்பேற்க உள்ளார். அந்த விழாவில், அமரீந்தருக்கு அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில காங்., செயல் தலைவர்களான குல்ஜித் சிங் நாக்ரா மற்றும் சங்கத் சிங் கில்ஜியான் ஆகியோர் அமரீந்தர் சிங்கை நேற்று சந்தித்தனர்.
பண்ணை வீட்டில் நடந்த சந்திப்பில் அமரீந்தருக்கு விழாவில் பங்கேற்க முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.இது குறித்து நாக்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:பஞ்சாப் மாநில காங்., தலைவர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் முதல்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அழைப்பை ஏற்றுள்ள முதல்வர் அமரீந்தர் சிங், சித்துவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று, ஆசி வழங்க வருகை தர உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
23-ஜூலை-202108:36:57 IST Report Abuse
duruvasar தற்சமயம் பஞ்சாபில் ராகுலின் கை ஓங்கி இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளனர். தேர்தல் நேரத்தில் சோனியா கோஷ்டி தங்கள் பலத்தை காட்டுவார்கள் என நம்பலாம்.
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
23-ஜூலை-202108:36:25 IST Report Abuse
கௌடில்யன் சித்து கபில் சர்மா நிகழ்ச்சியில் நடுவரா இருந்து அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவ கடுத்த காசுக்கு வஞ்சகம் பண்ணாம கலகலப்பா சிரிப்பார் ..இப்போ எப்படி செயல் படறார்னு பாக்கலாம் ..
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
23-ஜூலை-202108:29:46 IST Report Abuse
s t rajan காங்கிரஸில் கேப்டனும் captive அடிமை தான். எல்லாம் பதவி மோகம் தான். காங்கிரஸில் மானஸ்தர்களுக்கு இடமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X