பொது செய்தி

தமிழ்நாடு

வருவாய் கோட்டத்தில் 10 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சி மற்றும் தெற்கு ஒன்றியத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகவில்லை. வடக்கு ஒன்றியத்தில், குரும்பபாளையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவில், சிக்கலாம்பாளையம், கப்பளாங்கரை, கல்லாங்காட்டுப்புதுார்,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.பொள்ளாச்சி நகராட்சி மற்றும் தெற்கு ஒன்றியத்தில் நேற்று யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகவில்லை. வடக்கு ஒன்றியத்தில், குரும்பபாளையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கிணத்துக்கடவு தாலுகாவில், சிக்கலாம்பாளையம், கப்பளாங்கரை, கல்லாங்காட்டுப்புதுார், தாமரைக்குளம், நல்லிக்கவுண்டன்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த, ஐந்து பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.ஆனைமலை தாலுகாவில், நேற்று, வேட்டைக்காரன்புதுார், சுப்பேகவுண்டன்புதுார், கோட்டூர் மலையாண்டிபட்டணம் ஆகிய பகுதிகளில், நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வால்பாறை தாலுகாவில், ஐந்தாவது நாளாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், நேற்று, 10 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. தொற்று பாதித்தோர் வசிக்கும் பகுதிகளில், சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்து, காய்ச்சல் முகாம் நடத்தினர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், 11,436 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில், 11,130 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 200 பேர் சிகிச்சையில் உள்ளனர்; 107 பேர் இறந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X