பொது செய்தி

தமிழ்நாடு

பயன்பாட்டுக்கு வராத 'லிப்ட்' நடை மேம்பாலம்: பரிதாப நிலையாகும் முன் திறப்பது அவசியம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
உடுமலை;பஸ் ஸ்டாண்ட் அருகே, 'லிப்ட்' உடன் கூடிய நடை மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்றும், பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால், தேசிய நெடுஞ்சாலையை கடக்க மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பஸ்சில் இருந்து இறங்கி வரும் மக்கள், உடுமலை அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் மற்றும் கடைகளுக்கு செல்ல, தேசிய
 பயன்பாட்டுக்கு வராத 'லிப்ட்' நடை மேம்பாலம்: பரிதாப நிலையாகும் முன் திறப்பது அவசியம்

உடுமலை;பஸ் ஸ்டாண்ட் அருகே, 'லிப்ட்' உடன் கூடிய நடை மேம்பாலம் பணிகள் நிறைவு பெற்றும், பயன்பாட்டுக்கு திறக்கப்படாததால், தேசிய நெடுஞ்சாலையை கடக்க மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உடுமலை பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பஸ்சில் இருந்து இறங்கி வரும் மக்கள், உடுமலை அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம் மற்றும் கடைகளுக்கு செல்ல, தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டும்.நுாற்றுக்கணக்கான மக்கள் ரோட்டை கடக்கும் நிலையில், தொடர் வாகன போக்குவரத்து காரணமாக, ரோட்டை கடப்பதில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் என இரு தரப்பினருக்கும், சிரமம் ஏற்பட்டு, விபத்துக்களும் ஏற்பட்டு வந்தது.இதற்கு தீர்வு காணும் வகையில், பஸ் ஸ்டாண்ட் அருகே, 1.5 கோடி ரூபாய் செலவில், 'லிப்ட்' உடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணி கடந்தாண்டு, மார்ச் மாதம் துவங்கியது.நீண்ட இழுபறிக்குப்பிறகு, சில மாதங்களுக்கு முன் பணிகள் நிறைவு பெற்றது. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, பொதுப்போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், நடை மேம்பாலம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை. இதனால், பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க, சிரமப்பட்டு வருகின்றனர். கட்டுமான பணிகள் ஓராண்டாக நடந்து வரும் நிலையில், 'லிப்ட்' மற்றும் இதர கட்டமைப்புகள் செயல்பாட்டின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.பயன்பாட்டுக்கு வரும் முன்பே, நடை மேம்பாலம் பரிதாப நிலைக்கு மாறுவதை தவிர்க்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X