சரக்கு வாகனம் - பைக் மோதல் ஒருவர் பலி; நான்கு பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சரக்கு வாகனம் - பைக் மோதல் ஒருவர் பலி; நான்கு பேர் காயம்

Added : ஜூலை 23, 2021
Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சரக்கு வாகனம், பைக் மோதிய விபத்தில், மீன் வியாபாரி இறந்தார்; நான்கு பேர் காயமடைந்தனர்.பொள்ளாச்சி, ராமபட்டணத்தை சேர்ந்த மீன் வியாபாரி முகமது ஹக்கீம், 31. இவர், மனைவி கோபிகா, 20, உடன் பைக்கில் மண்ணுாரில் இருந்து ராமபட்டணம் நோக்கி நேற்றுமுன்தினம் சென்றார்.அப்போது, ராமபட்டணத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசாணிக்காய் லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம்
 சரக்கு வாகனம் - பைக் மோதல் ஒருவர் பலி; நான்கு பேர் காயம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சரக்கு வாகனம், பைக் மோதிய விபத்தில், மீன் வியாபாரி இறந்தார்; நான்கு பேர் காயமடைந்தனர்.பொள்ளாச்சி, ராமபட்டணத்தை சேர்ந்த மீன் வியாபாரி முகமது ஹக்கீம், 31. இவர், மனைவி கோபிகா, 20, உடன் பைக்கில் மண்ணுாரில் இருந்து ராமபட்டணம் நோக்கி நேற்றுமுன்தினம் சென்றார்.அப்போது, ராமபட்டணத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு அரசாணிக்காய் லோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்து, பைக் மீது மோதி ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. வாகனத்தில் இருந்த அரசாணிக்காய்கள் ரோட்டில் சிதறியது.இதில், முகமது ஹக்கீம், கோபிகா, சரக்கு வாகனத்தில் வந்த கருமாண்டகவுண்டனுார் ராஜேந்திரன்,45, சண்முகசுந்தரம்,35, பொன்மலையூர் மணிகண்டன்,30 ஆகியோர் காயமடைந்தனர். சிகிச்சைக்காக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.விபத்தில் படுகாயமடைந்த முகமது ஹக்கீம் மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X