பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி இன்று முதல் இலவசமாக போடலாம்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
சென்னை:மிழக அரசு மருத்துவமனைகளில், நிமோனியா தடுப்புக்கான, 'நியூமோகாக்கல்' தடுப்பூசி, இன்று முதல் குழந்தைகளுக்கு இலவசமாக போடப்பட உள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் காசநோய், ஹெபிடைடிஸ் - பி, இளம் பிள்ளை வாதம், தொண்டை அடைப்பான், தட்டம்மை, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.ஆனால், நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும்

சென்னை:மிழக அரசு மருத்துவமனைகளில், நிமோனியா தடுப்புக்கான, 'நியூமோகாக்கல்' தடுப்பூசி, இன்று முதல் குழந்தைகளுக்கு இலவசமாக போடப்பட உள்ளது.

தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் காசநோய், ஹெபிடைடிஸ் - பி, இளம் பிள்ளை வாதம், தொண்டை அடைப்பான், தட்டம்மை, ஜப்பானிய மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது.ஆனால், நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் நியூமோகாக்கல் தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் போடப்படாமல் இருந்தது.

தனியார் மருத்துவமனைகளில், ஒரு தவணை தடுப்பூசிக்கு 4,000 ரூபாய் வரை செலுத்த வேண்டி இருந்தது. இந்நிலையில், தேசிய தடுப்பூசி அட்டவணையில் புதிதாக, நியூமோகாக்கல் தடுப்பூசி இணைக்கப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக, தமிழகத்தில், ஆண்டுதோறும் 9.35 லட்சம் குழந்தைகள் பயனடைய உள்ளனர்.

இதற்கான திட்டத்தை, சமீபத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அதன்படி, பிறந்தவுடன் குழந்தைகளுக்கு ஒன்றரை, மூன்றரை, ஒன்பதாவது மாதம் என, மூன்று தவணையாக தடுப்பூசி போடப்பட உள்ளது.தமிழகம் முழுதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில், குழநதைகளுக்கு, நியூமோகாக்கல் தடுப்பூசி செலுத்தும் பணி, இன்று முதல் துவங்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X