அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: 'கிரீமிலேயர் வருமான வரம்பை, இப்போதுள்ள 8 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது குறித்து, ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு

சென்னை: 'கிரீமிலேயர் வருமான வரம்பை, இப்போதுள்ள 8 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வருமான வரம்பை உயர்த்துவது குறித்து, ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளாக கூறிவரும் மத்திய அரசு, இன்னும் இறுதி முடிவு எடுக்காதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை, அடுத்த சில வாரங்களில் துவங்க உள்ளது. அதற்குள்ளாக, கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்த்தப்படவில்லை என்றால், தகுதியுள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் சேர முடியாத நிலை ஏற்படும்.அதை தவிர்க்கும் வகையில், கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போதுள்ள 8 லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்த வேண்டும்.

அது மட்டுமின்றி, கிரீமிலேயர் வருமான வரம்பை கணக்கிடுவதில், விவசாயம் மற்றும் சம்பளம் வாயிலாக கிடைக்கும் வருவாய் சேர்த்து கொள்ளப்படாது என்றும், மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
23-ஜூலை-202108:52:43 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan இட ஒதுக்கீடு உண்மையான ஏழைகளுக்கு கிடைக்க வரம்பை குறைக்கவேண்டும். மாதம் லட்சம் வருமான முள்ளவனுக்கு எதற்கு சலுகை. பயனடைந்தவர்களுக்கே மறுபடி சலுகை கேட்பது மருத்துவருக்கு வெட்கமாயிருக்காதா
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்பந்திக்கே அழைக்கலை அதுக்குள்ளே ஏன்னா ஏழை ஓட்டை அது இதுன்னு ஜகர்த்தாவிலுமா EWS கோட்டா கொடுக்கறாங்க?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X