அரசியல் செய்தி

தமிழ்நாடு

உயர்மேடைகளை அகற்றுங்கள் சார் - பதிவாளர்களுக்கு உத்தரவு

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
சென்னை:சார் - பதிவாளர்கள் அமர உயர்மேடைகள் தேவையில்லை. சமதளத்தில் இருக்கையை அமைத்து பணியாற்றும்படி, பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சமீப காலமாக சார் - பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி, பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். பதிவுத்துறை செயலர் மற்றும் பதிவுத்துறை

சென்னை:சார் - பதிவாளர்கள் அமர உயர்மேடைகள் தேவையில்லை. சமதளத்தில் இருக்கையை அமைத்து பணியாற்றும்படி, பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சமீப காலமாக சார் - பதிவாளர் அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்தி, பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். பதிவுத்துறை செயலர் மற்றும் பதிவுத்துறை தலைவருடன், கோவை மற்றும் சேலம் மண்டலங்களில், அமைச்சர் கடந்த வாரம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பதிவு அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில், உயர்ந்த மேடையில் அமர்ந்து, பதிவு பணி செய்து வருவதால், பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி, அவர்களுக்கு பதிவு சேவை வழங்குவது சிரமமாக உள்ளது கண்டறியப்பட்டது.

எனவே, இனி வரும் காலங்களில், பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல், சரிசமமாக அமர்ந்து, பதிவுப்பணியை செய்ய வேண்டும் என, அமைச்சர் உத்தரவிட்டார்.சார் - பதிவாளர் அலுவலகங்களில், அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்ட நிலையில், அரசுக்கு செலுத்தும் கட்டணங்கள் இணைய வழியாக செலுத்தப்படுவதால், சார் - பதிவாளர்கள் பணத்தை கையாள வேண்டிய அவசியமில்லை.

எனவே, உயர்மேடைகள் தற்போது தேவையில்லை. பதிவு அலுவலர்கள் தங்கள் இருக்கையை சமதளத்தில் அமைத்து, சுற்றியுள்ள தடுப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என, பதிவுத் துறை தலைவர் ஜோதிநிர்மலாசாமி, துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X