மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர் சங்கம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர் சங்கம் மனு

Added : ஜூலை 23, 2021
Share
சென்னை:'பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.சங்கத்தின் தலைவர் இளமாறன் தலைமையில் நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனு:கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்து, தமிழகத்திற்கு தனி

சென்னை:'பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு நடத்த வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் தலைவர் இளமாறன் தலைமையில் நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் அளித்துள்ள மனு:கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்து, தமிழகத்திற்கு தனி கல்வி கொள்கையை உருவாக்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை, இலவசமாக்கப்பட வேண்டும்.அரசு பள்ளிகளில், போதிய கழிப்பறைகள் ஏற்படுத்தி தர வேண்டும்.

நிரந்தர துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், நிரந்தரமாக குமாஸ்தா, இரவு காவலர்களை பணியமர்த்த வேண்டும். அனைத்து வகை பள்ளிகளும், பள்ளி கல்வித்துறையின் கீழ் இணைக்கப்பட வேண்டும். பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, ஆசிரியர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்தாய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X