கோர்ட் செய்தி

தமிழ்நாடு

டாக்டர் உடலை அடக்கம் செய்ய எதிர்த்த வழக்கு திடீர் வாபஸ்

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த டாக்டரின் சடலத்தை, வேலங்காடு மயானத்தில் இருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை மாநகராட்சி தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர், டாக்டர் சைமன் ஹெர்குலிஸ்; கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 2020 ஏப்ரலில் மரணமடைந்தார். கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு இவரது

சென்னை:கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த டாக்டரின் சடலத்தை, வேலங்காடு மயானத்தில் இருந்து எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை மாநகராட்சி தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர், டாக்டர் சைமன் ஹெர்குலிஸ்; கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, 2020 ஏப்ரலில் மரணமடைந்தார். கீழ்ப்பாக்கம் கல்லறைக்கு இவரது உடலை எடுத்து வந்த போது, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்தனர்.

சடலத்தை தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்யக்கோரி, மாநகராட்சிக்கு, டாக்டரின் மனைவி ஆனந்தி மனு அளித்தார். மனுவை, மாநகராட்சி நிராகரித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆனந்தி சைமன் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துாஸ், வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை மாநகராட்சி மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், மஞ்சுளா அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது.இவ்வழக்கு டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதாக, மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X