சென்னை:வக்பு வாரிய தலைவராக, முன்னாள் எம்.பி., அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தேர்தல், நடந்தது. புதிய தலைவராக, முன்னாள் எம்.பி.,யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவருமான அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டார்.
தலைமை செயலகம் சென்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பி்ன்னர், அவர் அளித்த பேட்டி:வக்பு வாரிய தலைவராக பணியாற்ற வாய்ப்பு வழங்கிய, முதல்வருக்கு நன்றி. முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீனுக்கு நன்றி.
வக்பு வாரியத்தை பொறுத்தவரை, சமுதாயம் எதிர்நோக்கி கொண்டிருக்கும் பல்வேறு பணிகள் உள்ளன. முந்தைய காலகட்டத்தில் சீர்குலைந்து போன துறைகளை, முதல்வர் சீரமைத்து வருகிறார். முதல்வர் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில், முந்தைய காலகட்டத்தில், மிகவும் சேதமடைந்துள்ள வக்பு வாரிய நிர்வாகத்தை, சீரமைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
வக்பு வாரியத்தின் சொத்து விபரங்கள் கணினி மயமாக்கப்படும். நிர்வாகத்திற்கு எளிய வசதி ஏற்படுத்தப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு வாரிய சொத்துக்கள் சட்டரீதியாக மீட்கப்படும். வக்பு வாரிய சொத்துக்களை, பெயர் மாற்றி அனுபவித்து வருகின்றனர். அதை கண்டறிந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE