பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் பதிவிறக்கம்| Dinamalar

பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் பதிவிறக்கம்

Added : ஜூலை 23, 2021
சென்னை:பிளஸ் 2 மாணவ - மாணவியர், தங்கள் மதிப்பெண் பட்டியலை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு பிளஸ் 2 செய்முறை தேர்வில், 30 மதிப்பெண்; பிளஸ் 1 பொதுத் தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களில், 20 சதவீதம்.பத்தாம் வகுப்பில் அதிகபட்ச மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரி
 பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் மாணவர்கள் பதிவிறக்கம்

சென்னை:பிளஸ் 2 மாணவ - மாணவியர், தங்கள் மதிப்பெண் பட்டியலை, இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக, பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு பிளஸ் 2 செய்முறை தேர்வில், 30 மதிப்பெண்; பிளஸ் 1 பொதுத் தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற மதிப்பெண்களில், 20 சதவீதம்.பத்தாம் வகுப்பில் அதிகபட்ச மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரி மதிப்பெண்களில், 50 சதவீதம் சேர்த்து, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவரும் பெற்ற மதிப்பெண் விபரம், 19ம் தேதி வெளியிடப்பட்டது.மதிப்பெண் பட்டியல், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியானது. அதை மாணவ - மாணவியர் பதிவிறக்கம் செய்தனர்.பள்ளிகளில் ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியலை, மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X