கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' மந்திரி மணிகண்டனிடம் ரூ.10 கோடி கேட்டு நடிகை மனு

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனக்கு, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என, நடிகை சாந்தினி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.மலேஷியாவை சேர்ந்தவர் சாந்தினி, 37; நடிகை. இவர், சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். இவர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், 43, மீது, போலீசில் புகார் அளித்தார்.புகாரில், 'மணிகண்டன் என்னுடன்,

சென்னை:அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், தனக்கு, 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என, நடிகை சாந்தினி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

மலேஷியாவை சேர்ந்தவர் சாந்தினி, 37; நடிகை. இவர், சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். இவர், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன், 43, மீது, போலீசில் புகார் அளித்தார்.புகாரில், 'மணிகண்டன் என்னுடன், கணவன், மனைவி போல, ஐந்து ஆண்டுகள் குடும்பம் நடத்தினார். மூன்று முறை கர்ப்பமானேன்; கருக்கலைப்பு செய்தார்; அடித்து துன்புறுத்தினார். 'என் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார்; கொலை மிரட்டல் விடுத்தார்' என, புகாரில் கூறியிருந்தார்.

சென்னை அடையாறு மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, பெங்களூருவில் பதுங்கி இருந்த மணிகண்டனை, ஜூன் 20ல் கைது செய்து, சிறையில் அடைத்தனர். தற்போது, மணிகண்டன் தனக்கு இழப்பீடாக, 10 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், சாந்தினிமனு தாக்கல் செய்து உள்ளார்.

அதேபோல, சென்னையில் தங்கி வழக்கு நடத்த வீடு வாடகை, மருத்துவ செலவு உள்ளிட்டவைகளுக்கு இடைக்கால தொகையாக, 2.80 லட்சம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த மனு, ஆக.,5ல் விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - karaikudi,மலேஷியா
23-ஜூலை-202106:31:44 IST Report Abuse
Nanban கற்புக்கரசி இவள் இவளுக்கு பத்து கோடி என்ன மணிகண்டனின் சொத்து எல்லாம் கொடுக்க வேண்டும், இவள் மணிகண்டனிடம் பழகியதே பணத்துக்காக தானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X