அரசியல் செய்தி

தமிழ்நாடு

தடை செய்த புகையிலை பொருள் விற்றால் கடைகளுக்கு 'சீல்'

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில் தற்போதும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை நடக்கிறது. புகையிலை விற்பனை கடைகளுக்கு, 'சீல்' வைத்து, இரண்டு மாதங்களில் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், 'புகையிலை ஒழிப்பு' தொடர்பான ஆலோசனை
 தடை செய்த புகையிலை பொருள் விற்றால் கடைகளுக்கு 'சீல்'

சென்னை:''தமிழகத்தில் தற்போதும் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனை நடக்கிறது. புகையிலை விற்பனை கடைகளுக்கு, 'சீல்' வைத்து, இரண்டு மாதங்களில் முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில், 'புகையிலை ஒழிப்பு' தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின், அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில், புகையிலை பொருட்கள் அனைத்து இடங்களிலும் கிடைத்தன. புகையிலை பொருட்களை காண்பித்து, சட்டசபையிலும் கேள்வி எழுப்பினோம். தற்போதும், அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இரண்டு மாதங்களாக, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதால், இவற்றில் கவனம் செலுத்த முடியவில்லை.


உணவு பாதுகாப்பு



எட்டு ஆண்டுகளில், 30 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்கிறது. இவை, காவல் துறைக்கும், உணவு பாதுகாப்பு துறைக்கும் தெரிந்தே, சில இடங்களில் விற்கப்படுகின்றன. புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பதை, கொரோனா பேரிடர் போல கருத வேண்டும். உள்ளாட்சி துறை, காவல் துறை, உணவு பாதுகாப்பு துறையினர் ஒருங்கிணைந்து, வணிகர்களுடன் பகுதி வாரியாக ஆலோசிக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க மாட்டோம் என, வியாபாரிகளை உறுதிமொழியேற்க வைக்க வேண்டும்.மாநிலம் முழுதும், இன்று முதல் அனைத்து பகுதிகளிலும், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனை செய்யும் கடைகளுக்கு, 'சீல்' வைக்க வேண்டும். உயிரை கொல்லும் ஒரு பொருளை விற்றால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றால், வியாபாரிகள், புகையிலை பொருட்களை விற்க மாட்டார்.தீவிரமாக கண்காணித்தால், எந்த வாகனத்தில் வருகிறது என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க முடியும்.


விழிப்புணர்வு

இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால், இரண்டு மாதங்களில், குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த முடியும்.வடமாநிலத்தவர் மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்த மாணவர்களும், புகையிலை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களுக்கு, புகைஇலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கோரமான பொம்மைகளை உருவாக்கி, பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும். புகையிலை விற்பனையை முழுமையாக தடுக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி களுக்கு, பாராட்டு சான்றிதழுடன் விருதுகளும் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


புகார் தெரிவிக்கலாம்!

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட, குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்வோர் குறித்து, 94440 42322 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்போர் விபரம் பாதுக்காக்கப்படும்; நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் தண்டிக்கப்படுவர் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Ontario,கனடா
23-ஜூலை-202116:18:15 IST Report Abuse
Rajesh திருடர்களுக்கு இவர் சிக்னல் கொடுக்கிறார் ...... வேறு ஒன்றும் இல்லை .....
Rate this:
Cancel
Pandi - Sivaganga,இந்தியா
23-ஜூலை-202109:23:16 IST Report Abuse
Pandi தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க மாட்டோம் என, வியாபாரிகளை உறுதிமொழியேற்க வைக்க வேண்டும்.மாநிலம் முழுதும், இன்று முதல் அனைத்து பகுதிகளிலும், புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனை செய்யும் கடைகளுக்கு, 'சீல்' வைக்க வேண்டும். உயிரை கொல்லும் ஒரு பொருளை விற்றால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றால், வியாபாரிகள், புகையிலை பொருட்களை விற்க மாட்டார் ( அப்படியென்றால் மதுவினால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லையா ??????????)
Rate this:
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
23-ஜூலை-202108:57:33 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கரூர்,திருச்சி பேருந்து நிலையங்களில் போதை பொருள்கள் தாராளமாக கிடைக்கின்றன. போதை வஸ்துகள் விற்கப்பட்டால் கடைக்கு சீல் வைப்பதோடு அந்த வட்டார போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் .காவல்துறை உதவியின்றி பாண் பராக் விற்கமுடியாது. அதை வாங்குபவர்களின் அதிகம் காவலர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X